Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி காரைக்கால் துறைமுகம்: அதானி போர்ட்ஸ், வேதாந்தா குழுமம் இணைந்து ஏலம்!

காரைக்கால் துறைமுகம் ரூ.2,960 கோடி கடனைத் திருப்பிச் செலுத்தாததால், இந்த ஆண்டு ஏப்ரலில் NCLTயின் சென்னை பெஞ்ச் திவால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

புதுச்சேரி காரைக்கால் துறைமுகம்: அதானி போர்ட்ஸ், வேதாந்தா குழுமம் இணைந்து ஏலம்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  6 Oct 2022 2:46 AM GMT

புதுச்சேரியில் காரைக்கால் துறைமுகத்திற்கு செலுத்த வேண்டிய கடனை செலுத்தாததால் அவற்றை தனியார் ஏலம் எடுக்கும் முயற்சி தற்போது ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள 600 ஏக்கர் துறைமுகத்துக்கு, இணை ஏலதாரர்கள் உட்பட மொத்தம் ஐந்து பேர் ஆகஸ்ட் மாதம் ஏலம் எடுக்க விருப்பம் தெரிவித்தார்கள். அதில் அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலம் (APSEZ) மற்றும் வேதாந்தா குழும நிறுவனத்துடன் இணைந்து காரைக்கால் துறைமுகத்திற்கான நிதி ஏலத்தை செப்டம்பர் 30 வெள்ளிக்கிழமையன்று சமர்ப்பித்ததாக எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


காரைக்கால் துறைமுகம் ரூ.2,960 கோடி கடனைத் திருப்பிச் செலுத்தாததால், இந்த ஆண்டு ஏப்ரலில் தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்தின் சென்னை பெஞ்ச் மூலம் திவால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இரண்டு இறுதி ஏலங்களும் இன்று நடைபெறும் குழு கூட்டத்தில் முடிவு அறிவிக்க பட உள்ளது. 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது காரைக்கால் துறைமுகம். அனைத்து காலநிலையிலும் உள்ள ஆழ்கடல் துறைமுகமாகும். இது அரசு மற்றும் MARG இடையேயான பொது-தனியார் கூட்டாண்மை (PPP) ஏற்பாட்டில் உருவாக்க, இயக்க மற்றும் பரிமாற்ற வடிவத்தில் உருவாக்கப்பட்டது.


நிலக்கரி, சர்க்கரை, சிமெண்ட், உரங்கள், திட்ட சரக்குகள், வேளாண் பொருட்கள், திரவ சரக்குகள் மற்றும் கொள்கலன்கள் போன்ற பல்வேறு சரக்குகளை துறைமுகம் கையாண்டுள்ளது. பதினொரு பொதுத்துறை வங்கிகள், நிதி நிறுவனங்களின் குழுவால் 1,362 கோடி ரூபாய் கடனாக துறைமுகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.

Input & Image courtesy: Business Standard News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News