ஸ்ரீ அரவிந்தரின் படைப்புகள் மற்றும் சிந்தனைகள் அனைவருக்கும் பொருந்தும் - உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழாரம்
By : Thangavelu
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்திற்கு அரசு முறை பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் நேற்று இரவு சென்னைக்கு வருகை புரிந்தார். அதன் பின்னர் காலை புதுச்சேரி மாநிலத்திற்கு வந்துள்ள அவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு அருங்காட்சியகம் மற்றும் ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்திற்கு சென்று மரியதாதை செலுத்தினார்.
புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமம் சென்றோம்.
— Amit Shah (@AmitShah) April 24, 2022
ஸ்ரீ அரவிந்தர் அறிவார்ந்த மற்றும் ஆன்மிகத்தில் சிறந்து விளங்கியவர். இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர். அரவிந்தரின் படைப்புகள் மற்றும் சிந்தனைகள் அனைவருக்கும் பொருந்தக்கூடியது. நமக்கு வழிகாட்டும் ஒளியாக திகழும் அவருக்கு நம் அஞ்சலிகள். pic.twitter.com/TzL64pe95d
அதனை முடித்துக்கொண்ட அவர் பல்கலைக்கழக கருத்தரங்கு கூட்டத்தில் நடைபெற்ற ஸ்ரீ அரவிந்தரின் 150வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்று உரையாற்றினார். அங்கு பேசியவதாவது: தேசத்தின் ஆன்மாவை அறிய வேண்டுமானால் ஸ்ரீ அரவிந்தரின் எழுத்துக்களை படிக்க வேண்டும். மேலும், இது குறித்து அவரது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமம் சென்றோம். ஸ்ரீ அரவிந்தர் அறிவார்ந்த மற்றும் ஆன்மிகத்தில் சிறந்து விளங்கியவர். இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர். அரவிந்தரின் படைப்புகள் மற்றும் சிந்தனைகள் அனைவருக்கும் பொருந்தக்கூடியது. நமக்கு வழிகாட்டும் ஒளியாக திகழும் அவருக்கு நம் அஞ்சலிகள். இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Source: Daily Thanthi
Image Courtesy: Twiter