மகாகவி பாரதியார் அருங்காட்சியகத்தை பார்வையிடும் பேறு பெற்றேன் - உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருமிதம்
By : Thangavelu
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அரசு முறை பயணமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை புரிந்துள்ளார்.
அதன்படி புதுச்சேரிக்கு சென்ற மத்திய அமைச்சர் அமித்ஷா, மகாகவி பாரதியார் அருங்காட்சியத்தை பார்வையிட்டார். அங்கு தான் வருகை புரிந்ததற்கான நோட்டில் தனது கையெழுத்தையும் இட்டார். அவருடன் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
புதுச்சேரியில் மகாகவி பாரதியார் அருங்காட்சியகத்தை பார்வையிடும் பேறு பெற்றேன்.
— Amit Shah (@AmitShah) April 24, 2022
சுப்ரமணிய பாரதி தேசபக்தி, ஒற்றுமை மற்றும் சமூக சீர்திருத்தங்களின் மறுவடிவாக திகழ்ந்தார்.
நம்மையெல்லாம் வசப்படுத்தும், அவரது தேசபக்திப் பாடல்கள் தமிழகத்தில் இந்திய சுதந்திரப் போராட்டத்தை ஊக்குவித்தது pic.twitter.com/0msTtxVBiO
இந்நிலையில், இது பற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: புதுச்சேரியில் மகாகவி பாரதியார் அருங்காட்சியகத்தை பார்வையிடும் பேறு பெற்றேன். சுப்ரமணிய பாரதி தேசபக்தி, ஒற்றுமை மற்றும் சமூக சீர்த்திருத்தங்களின் மறுவடிவாக திகழ்ந்தார். நம்மையெல்லாம் வசப்படுத்தும், அவரது தேசபக்திப் பாடல்கள் தமிழகத்தில் இந்திய சுதந்திரப் போராட்டத்தையும் ஊக்குவித்தது. இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Source, Image Courtesy: Twiter