புதுச்சேரி மூலநாதர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!
புதுச்சேரி, பாகூர் பகுதியில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் மூலநாதர் கோயிலுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் பக்தர்கள் மழைநீரில் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
By : Thangavelu
புதுச்சேரி, பாகூர் பகுதியில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் மூலநாதர் கோயிலுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் பக்தர்கள் மழைநீரில் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. குமரிக்கடல் மற்றும் இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வருகின்ற 1ம் தேதி வரைக்கும் புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியில் நேற்று காலை (நவம்பர் 27) வெயில் சற்று தென்பட்டது. அதன்பின்னர் மதியம் 3 மணிக்கு மழை பெய்யத்துவங்கியது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. 7 மணி வரை கனமழை நீடித்தது. இதன் ஒரு பகுதியாக பாகூரிலும் மழை நேற்று முன்தினம் இரவு முதல் காலை வரை விடிய, விடிய கொட்டித்தீர்த்தது. இதனால் மிகவும் பழமை வாய்ந்த மூலநாதர் கோயிலுக்குள் தண்ணீர் புகுந்தது. கோயிலை சுற்றிலும் தண்ணீர் குளம்போன்று தேங்கி நிற்கிறது. மழை தண்ணீரை பொருட்படுத்தாமல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததையும் காண முடிகிறது. விரைவில் மழை தண்ணீரை அப்புறப்படுத்த வேண்டும் என அரசுக்கு பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Source, Image Courtesy: Daily Thanthi