27 வயது இளையவரிடம் ஆசி வாங்கிய 69 வயது தி.மு.க தலைவர் - 'மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு'!
27 வயது இளையவரிடம் ஆசி வாங்கிய 69 வயது தி.மு.க தலைவர் - 'மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு'!
By : Mohan Raj
ஆனால் தி.மு.க-விலோ எல்லாம் தலைகீழ். பதவி, பட்டம் வேண்டும் என்றால் தி.மு.க-வில் உள்ள வயதில் மூத்தோர் கூட வயது வித்தியாசமின்றி யார் காலில் வேண்டுமானாலும் விழுவர் என்பது நிரூபணமாகிவிட்டது. அதிலும் 69 வயதில் பிறந்தநாள் கொண்டாடும் முதியவர் கூட தன் ஒட்டியிருக்கும் பதவிக்கு ஆபத்து வரக்கூடாது என தன்னை விட 27 வயது சிறியவரான அதாவது 42 வயதுடையவரிடம் ஓடிசென்று ஆசி பெற்றுள்ளார்.
இன்று தி.மு.க-வின் முதன்மை செயலாளர் திருச்சியை சேர்ந்த கே.என்.நேரு அவர்களின் 69-வது பிறந்தநாள். இந்த பிறந்தநாளை முன்னிட்டு அவர் ஸ்டாலினிடம் சென்று அவருக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்து ஸ்டாலினிடம் கே.என்.நேரு ஆசி வாங்கினார். இவ்வளவிற்கும் ஸ்டாலின் அவர்கள் கே.என் நேருவை விட ஒரு வயது இளையவர். சரி அதாவது பரவாயில்லை கே.என் நேரு வின் ஆரம்பகால நண்பர் ஸ்டாலின், அது மட்டுமல்லாது தி.மு.க-வின் தலைவரும் கூட அதனால் இந்த மரியாதை என வைத்து கொள்ளலாம்.
69 வது பிறந்தநாளை முன்னிட்டு கழக தலைவர் @mkstalin அவர்களிடம் வாழ்த்து பெற்றேன். pic.twitter.com/1zBFN926Mv
— K.N.NEHRU (@KN_NEHRU) November 8, 2020
ஆனால் அடுத்து கே.என்.நேரு அவர்கள் செய்த காரியம்தான் உச்சகட்டமே, தன்னை விட 27 வயது இளையவரான உதயநிதி அவர்களை தேடிச்சென்று உதயநிதிக்கு மரியாதை செலுத்தி 42 வயது இளையவரான உதயநிதியிடம் 69 வயது மூத்தோரான கே.என்.நேரு ஆசி வாங்கியுள்ளார்.
69 வது பிறந்த நாளை முன்னிட்டு கழக இளைஞரணி செயலாளர் தம்பி @Udhaystalin அவர்களிடம் வாழ்த்து பெற்ற போது. pic.twitter.com/WVx40hA2Hq
— K.N.NEHRU (@KN_NEHRU) November 8, 2020
தி.மு.க-வில் பதவிக்காக வயது வித்தியாசம் பாராமல் பிடிப்பார்கள் என்பது ஒருபுறம் உணரப்பட்டாலும், கட்சியில் காலம் காலமாய் உழைத்தாலும், கட்சியை உயிர் கொண்டு வளர்த்தாலும், கட்சியே மூச்சு என திரிந்தாலும் தி.மு.க-வில் வயது வித்தியாசமின்றி அனைவருமே ஸ்டாலின் குடும்பத்தின் காலடியில் தான் என்பதை இன்றைய சம்பவத்தின் மூலம் கே.என்.நேரு அவர்கள் மக்களுக்கு நிரூபித்துள்ளார்.
கே.என்.நேரு ஆரம்ப காலத்தில் 1986 ஆண்டு தி.மு.க. சார்பில் புள்ளம்பாடி யூனியன் தலைவராக தன் தி.மு.க பொதுவாழ்வில் ஈடுபடும் போது உதயநிதியோ 9 வயதில் விளையாடிக்கொண்டு இருந்திருப்பார். "எல்லாம் நேரம்" என மூத்த உடன்பிறப்புகளோ புலம்பும் வேளையில், "தி.மு.க-வினருக்கு பதவிதான் முக்கியம் மரியாதையை அல்ல" என்று ஒருசாரார் கூறுகின்றனர்.
"மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு" என்று ஈ.வெ.ராமசாமி மேடைகளில் அடிக்கடி கூறுவார்.