2001ல் ஆட்சியை ஸ்டாலின் பிடிப்பார் என ஆவேசமான உதயநிதி - ஸ்டாலினை விஞ்சும் உளறல் நாயகன்.!
2001ல் ஆட்சியை ஸ்டாலின் பிடிப்பார் என ஆவேசமான உதயநிதி - ஸ்டாலினை விஞ்சும் உளறல் நாயகன்.!
By : Mohan Raj
கட்சி தலைவர்கள் செயல்களை விட முதலில் கவர்வது அவர்களின் மேடைப்பேச்சுதான். அந்த வகையில் தமிழகத்தில் பேசியே ஆட்சியை பிடித்ததென்றால் அது தி.மு.க மட்டுமே, தி.மு.க'வின் துவக்கங்களில் அதன் பேச்சாளர்கள் மேடையில் பேச துவங்கினால் எந்த வேலை பார்த்துக்கொண்டிருந்தாலும் மக்கள் அதனை அப்படியே போட்டுவிட்டு ஓடி வந்துவிடுவார்கள். அப்படி இருக்கும் தி.மு.க தலைவர்களின் பேச்சு.
ஆனால் இன்றைய தி.மு.க'வோ பணம் படைத்த வாரிசுகளால் சூழப்பட்ட தி.மு.க ஆயிற்றே இங்கு கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு கட்சியில் பணியாற்றுபவர்களை விட எவ்வாறு கொள்ளையடிக்கலாம் என 24 மணி நேரமும் யோசனையில் இருப்பவர்களே தி.மு.க'வை ஆக்கிரமித்திருப்பதால் அதன் அச்சாரமான பேச்சு இன்று இல்லமல் போய்விட்டது.
ஏற்கனவே தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேச்சு தமிழக அரசியல் உலகம் அறியும். தி.மு.க'வினரே இவர் பேசுவதை விட பேசாமல் இருப்பது நல்லது என நினைக்கும் அளவிற்கு இருக்கும் ஸ்டாலினின் பேச்சு. இவ்வளவிற்கும் கருணாநிதி'யின் மகன் என இதுவரை இவர் கூறியதை எண்ணிவிட முடியாது.
அந்த வகையில் தகப்பனை மிஞ்சும் பிள்ளையாக உதயநிதி வந்துவிட்டார். செயலில் அல்ல உளறலில். ஆம் கட்சி கூட்டம் ஒன்றில் உதயநிதி உளறியதுதான் தற்போதைய சமூக வலைதள வைரல்.
"2001'ல் தலைவர் ஸ்டாலின் ஆட்சியை பிடிப்பார்" என ஆவேசத்துடன் முழங்கியுள்ளார் உதயநிதி அதில் முக்கிய அம்சம் என்னவெனில் அதற்கும் மேடைக்கு கீழே இருக்கும் உடன்பிறப்புகள் கைதட்டியதுதான். இதிலிருந்தே தெரிகிறது தி.மு.க உடன்பிறப்புகளின் அறிவாற்றல்.
உதயநிதி இப்படி உளறவில்லை என்றால் தான் ஆச்சர்யம் என உடன்பிறப்புகளே சிலாகிக்கின்றனர். பாவம் தி.மு.க!