Kathir News
Begin typing your search above and press return to search.

அனைவரையும் வியக்க வைத்த பெரியஅறுவை சிகிச்சை எது என்று தெரியுமா ?

30 வயது பெண்ணின் கருப்பையில் இருந்து 90 கிலோ எடையுள்ள கட்டி அகற்றப்பட்ட அறுவை சிகிச்சை தான் உலகிலேயே பெரியது.

அனைவரையும்  வியக்க வைத்த பெரியஅறுவை சிகிச்சை எது என்று தெரியுமா ?

KarthigaBy : Karthiga

  |  17 Aug 2022 11:00 AM GMT

மருத்துவம் பெரிதாக முன்னேறாத அந்த காலத்தில் எல்லா வகை நோய்களுக்கும் உள் மருந்து மட்டுமே தரப்பட்டது.உடலின் வெளியில் ஏற்படும் காயங்கள், கட்டிகள் போன்றவற்றிற்கும் உள் மருந்தே கொடுக்கப்பட்டது. கஷாயம்,சூரணம் லேகியம் தான் மருந்து.கட்டிகள் போன்ற வியாதிகள் அகற்றப்படாமல் மருந்துp மூலம் குணமாகிவிடும் என்று நம்பப்பட்டது. கொடிய நோய்களால் அதிக எண்ணிக்கையில் இறந்தனர்.

அறுவை சிகிச்சை முறை பதினாறாம் நூற்றாண்டில் தொடங்கியது. முதன்முதலாக இங்கிலாந்தில் ஒரு நோயாளியின் நுனியில் இருந்த சிறு கட்டி ஒன்றை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினார்கள். உலகில் முதன்முதலாக நடந்த இந்த அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் கருவிகள் ஒரு எரியும் மெழுகுவர்த்தி ஒன்று, வலி மிகுதியால் நோயாளி விடாமல் அழுத்திப் பிடித்துக்கொள்ள இரண்டு பேர் இருந்தனர்.


அவர்களை வைத்துதான் அந்த அறுவை சிகிச்சை நடந்தது. அதன் பின்னர் விஞ்ஞான வளர்ச்சியால் படிப்படியாக மருத்துவம் முன்னேறியது. அறுவை சிகிச்சையிலும் பெரும் மாற்றம் முன்னேற்றம் ஏற்பட்டது.இதற்கு உதாரணமாக அமெரிக்காவில் நடந்த அறுவை சிகிச்சையை சொல்லலாம்.

இது மிகச்சிறந்த அதே நேரத்தில் கடினமான அறுவை சிகிச்சை என்று உலகமே ஒப்புக் கொண்டது 1908ல் மே மாதம் அறுவை சிகிச்சை நடந்தது கலிபோர்னியா பல்கலைக்கழக மருத்துவர்களால் நடத்தப்பட்டது 30 வயது பெண்ணின் கருப்பையில் இருந்த கட்டி அகற்றப்பட்டது இது என்ன பெரிய விஷயமா என்று கேட்பவர்களுக்கு தோன்றும்.

அந்தக் கட்டியின் எடை 90 கிலோ இந்த கட்டியை உடைத்தபோது அதில் இருந்த 74 லிட்டர் நீர் வெளியேறியது.அதன் பின்னும் 18 கிலோ எடை கொண்ட சதைப் பிண்டமாக அந்த கட்டி இருந்தது. அறுவை சிகிச்சைக்கு முன் 172 கிலோ எடை இருந்த அந்தப் பெண் சிகிச்சை முடிந்ததும் 82 கிலோவாக எடை குறைந்தார். 7 டாக்டர்கள் கொண்டு செய்யப்பட்ட இந்த அறுவை சிகிச்சைதான் அப்போது உலகிலேயே பெரியது என்று மருத்துவத் துறையினரால் இன்றளவும் சொல்லப்படுகிறது.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News