நாசாவின் நிலவு பயணத் திட்டம் - இடம் பெற்ற இந்திய விஞ்ஞானி யார்?
நாசாவின் நிலவு பயணம் திட்டத்திற்கு தற்போது இந்திய விஞ்ஞானி ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
By : Bharathi Latha
நாசாவின் நிலவு பயணத் திட்டத்தில் தற்போது இந்தியாவில் சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் மேலும் அவர் பெயர்தான் அமித் பாண்டே. இவர் இந்தியாவைச் சேர்ந்த மூத்த விஞ்ஞானி ஆவார். கடந்த 1969ஆம் ஆண்டு அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிலையமான நாசா தனது அப்பல்லோ திட்டம் மூலம் நிலவுக்கு முதல்முறையாக மனிதர்களை அனுப்பி வைத்தது இந்த பொருத்தம் வரலாறு சாதனை படைத்தது என்பதும் குறிப்பிடதக்கது அதன் பிறகு மீண்டும் தற்போது நிலவு தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வர முடிவு செய்துள்ளது.
மேலும் நிலவுகளில் எத்தகைய மாற்றங்கள் நடந்தேறி வருகிறது? என்பதை ஆய்வு செய்வதற்காக மீண்டும் ஒரு குழுவை நாசா அனுப்ப உள்ளது. இந்தத் திட்டத்திற்கு புதிய பெயர் தான் ஆர்டெமிஸ். இந்நிலையில் இந்த திட்டத்தில் மூத்த விஞ்ஞானியாக இந்தியாவைச் சேர்ந்த அமித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹல்த்வானி என்ற நகரில் பிறந்த அமித், பல ஆண்டுகளாக அமெரிக்காவில் ஆராய்ச்சி விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். மாணவர்களுக்கு இணையதளம் வழியாக கல்வி, வேலைவாய்ப்பு குறித்த ஆலோசனைகளை இலவசமாக வழங்கிbவருகிறார்.
எனவே இவரை தான் தற்போது நிலவுப் பயணத்தை மேற்கொள்வதற்கு நாசா சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்தத் திட்டம் இந்த மாத இறுதியில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது நாசாவின் பல்வேறு வட்டாரங்கள். எனவே முதல்முறையாக இந்தத் திட்டத்தில் இடம் பெற்ற இந்தியர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
Input & Image courtesy: News