Begin typing your search above and press return to search.
குறுகிய தூர இலக்கை தாக்கும் புதிய ஏவுகணை சோதனை வெற்றி - ராஜ்நாத் சிங் பாராட்டு
மிகக்குறுகிய தூர இலக்கை துல்லியமாக தாக்கும் விசூரத்ஸ் சோதனை வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
By : Karthiga
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் அமைப்பு நேற்று ஒடிசா கடற்கரையில் உள்ள சந்திப்பூரில் வெற்றிகரமாக மிக குறுகிய தூர இலக்கை துல்லியமாக தாக்கும் விசூரத்ஸ் ஏவுகணையை சோதனை செய்தது.
இது ஹைதராபாத்தை தளமாக கொண்ட ஆராய்ச்சி மையமான இமாரத் மூலம் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட மற்றும் உருவாக்கப்பட்ட ஒரு வான் பாதுகாப்பு ஏவுகணையாகும். மிகக் குறுகிய தூர ஏவுகணையான இதை எளிதில் சுமந்து செல்ல முடியும். பல புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கியது.இது சோதனைகளின் போது வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத்சிங் சோதனையை வெற்றிகரமாக்கிய டி.ஆர்.டி.ஓ அதிகாரிகளை பாராட்டினார்.
Next Story