பொதுமக்களே ராக்கெட் ஏவுவதை நேரில் பார்வையிட வேண்டுமா? இஸ்ரோ சொன்ன குட் நியூஸ்...!
பி.எஸ்.எல்.வி.சி- 56 ராக்கெட் ஏவுவதை நேரில் பார்வையிட பொதுமக்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதற்கான அனுமதி சீட்டைப் பெற இஸ்ரோ அழைப்பு விடுத்துள்ளது.
By : Karthiga
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வருகிற 30-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை ஆறு முப்பது மணிக்கு பி.எஸ் l.எல்.வி.சி - 56 ராக்கெட் முதல் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவுகிறது.
இதில் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த 360 கிலோ எடை கொண்ட டி.எஸ். சாட் என்ற பிரதான செயற்கைக்கோளுடன் விளேக்ஸ்ஸ் - ஏ எம், ஆர்கேட், ஸ்கூப்-2 , நியோலயன், கலாசியா- 2,ஓ.ஆர்.பி - 12 ஸ்டைடர் ஆகிய ஆறு செயற்கைக்கோள்களும் இந்த ராக்கெட்டில் பொருத்தப்பட்டு விண்ணுக்கு ஏவப்படுகிறது . ஒவ்வொரு முறையும் ராக்கெட் ஏவுவதை பொதுமக்கள் பார்வையிடுவதற்காக சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய வளாகத்தில் பத்தாயிரம் பார்வையாளர்கள் அமர்ந்து ராக்கெட் ஏவுவதை பார்வையிடும் வகையில் ஒருஇடம் அமைக்கப்பட்டுள்ளது.
அதில் வர விரும்பும் பார்வையாளர்களுக்கான அனுமதி சீட்டைப் பெற http://lvg.shar.gov.in என்ற இணையதள முகவரியில் பெற்றுக் கொள்ளலாம். இதற்கான இறுதி கட்ட பணியாளர் கவுண்டவுன் வருகிற 29ஆம் தேதி தொடங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
SOURCE:DAILY THANTHI