பாண்டமிக் நேரத்தில் பீதியை கிளப்பும் தமிழ் மீடியாக்கள்- இதற்கு தான் இந்தியாவில் பத்திரிக்கை தணிக்கை வேண்டும் என்பது!
By : Muruganandham
தடுப்பூசி போட்டவர்களில் 21 ஆயிரம் பேருக்கு கொரோனா ஏற்பட்டதாக மக்களை பீதிக்குள்ளாக்கும் வகையில் செய்தி வெளியிட்டுள்ளது மாலைமலர் ஊடகம்.
இந்தியாவில் கோவேக் சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளது. இதுவரை சுமார் 13 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கோவேக்சின் முதல் டோஸ் போட்டு 28 நாட்கள் கழித்து 2-வது டோஸ் போட்டுக்கொள்ள வேண்டும். கோவிஷீல்டு முதல் டோஸ் போட்டு 6 வாரங்கள் கழித்து 2-வது டோஸ் போட்டுக் கொள்ள வேண்டும்.
தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம் என்கிறார்கள். தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டால் பாதிப்பு மட்டும் குறைவாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஐ.சி.எம்.ஆர். நடத்திய ஆய்வில் தடுப்பூசி போட்டவர்களில் 10 ஆயிரம் பேரில் 2 முதல் 4 பேருக்கு தொற்று வரலாம் என்று தெரிய வந்துள்ளது.
கோவேக்சின் தடுப்பூசி இரண்டு டோசும் போட்டவர்கள் 17 லட்சத்து 37 ஆயிரத்து 178. இவர்களில் மீண்டும் தொற்று ஏற்பட்டது 695 பேருக்கு மட்டும்.
கோவிஷீல்டு இரண்டு டோசும் போட்டுக் கொண்டவர்கள் 1 கோடியே 57 லட்சத்து 32 ஆயிரத்து 754 பேர். இதில் மீண்டும் தொற்று ஏற்பட்டவர்கள் 5,014 பேர்.
கோவேக்சின் முதல் டோஸ் போட்டவர்கள் 93 லட்சத்து 56 ஆயிரத்து 436 பேர். இதில் மீண்டும் 4 ஆயிரத்து 208 பேருக்கு தொற்று ஏற்பட்டது
கோவிஷீல்டு முதல் டோஸ் போட்டுக் கொண்டவர்கள் 10 கோடியே 3 லட்சத்து 2,745 பேர். அவர்களில் 17 ஆயிரத்து 145 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இதன் மூலம் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பாதிப்பு மிக மிக குறைவு என்பது தெரிய வந்துள்ளது.
இவ்வளவு நேர்மறையான முடிவுகள் இருக்கும் நிலையில், மக்களிடம் பீதியை உண்டாக்கும் வகையில், தடுப்பூசி போட்டவர்களில் 21 ஆயிரம் பேருக்கு கொரோனா ஏற்பட்டதாக தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.