கூட்டணிக்கு ஏற்றவாறு கூஜா தூக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - தி.மு.க ரவுடிகளால் லீலாவதி படுகொலை செய்யப்பட்டது மறைப்பு!
By : Muruganandham
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்காக வாழ்க்கை முழுக்க பணியாற்றி, திமுக ரவுடிகளால் கொல்லப்பட்ட லீலாதியின் இறப்பு தொடர்பான பின்னணியை மறைத்து, கபாட நாடகம் ஆடி வருகிறது தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த லீலாவதி மதுரை மாநகராட்சி, வில்லாபுரம் பகுதியின் 59 ஆவது வட்ட மாமன்ற உறுப்பினராக இருந்தவர். இந்திய ஜனநாயக மகளிர் சங்கத்தின் செயல் வீராங்கனையான இவர், தன் வாழ்நாள் முழுவதும் பொதுப் பணிக்காகப் போராடியவர்.
அறையின் நடுவில் நெசவுத்தறி, அதைச்சுற்றிப் பெட்டி படுக்கை அங்கேயே அடுப்பை வைத்து சமையல், இரவில் தறிக்கு கீழேயே உறக்கம் என்ற நிலையில் அவரது குடும்பம் இருந்தது.
1996 ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழக உள்ளாட்சி தேர்தலின் போதுதான் முதன்முறையாக பெண்களுக்கென்று மூன்றில் ஒரு பகுதி தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக போட்டியிட்டு வில்லாபுரம் பகுதியின் 59 ஆவது வட்ட மாமன்ற உறுப்பினராக செயலாற்றி வந்தார்.
தனது வார்டில், மாநகராட்சிக் குடிநீர் வசதிக்குத் தடையாக இருந்த திமுக சமூக விரோதிகள், செயற்கையாக மாநகராட்சி குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படுத்திவிட்டு, பின்பு ஆழ்துளை கிணற்று நீரை லாரிகள் மூலம் வில்லாபுரம் பகுதியில் விற்பனை செய்தனர்.
இதனை தட்டிக் கேட்ட காரணத்தால், லீலாவதி, 23 , ஏப்ரல் 1997 அன்று பட்டப்பகலில் வில்லாபுரம் கடைத் தெருவில் வெட்டிக் கொல்லப்பட்டார்.
முதலமைச்சர் மு. கருணாநிதி தலைமையிலான ஆட்சியில், மாநில அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்திச் சிறையில் இருந்த லீலாவதி கொலைக் குற்றவாளிகளில் மூன்று பேர் விடுதலை செய்யப்பட்டனர். 2015 இல் ஜெ. ஜெயலலிதா ஆட்சியில் நன்னடத்தை விதிகளை மீறினார் என ஒரு குற்றவாளியான நல்லமருது மீண்டும் கைதாகிச் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவருடைய நினைவு நாள் ஏப்ரல் 23அன்று அனுசரிக்கப்பட்ட நிலையில், புதுச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முகநூல் பக்கத்தில் திமுக ரவுடிகளால் படுகொலை செய்யப்பட்ட தகவல் இடம்பெற்றுள்ளது. ஆனால் அதே கட்சியின் தமிழக முகநூல் பக்கத்தில், அந்த மாதிரி எந்த தகவலும் இடம்பெறாமல், கூட்டணி கட்சியான திமுகவை புண்படுத்தாமல் பதிவிட்டுள்ளது.
காலம் முழுக்க கட்சிக்காக உழைத்த ஒரு பெண் தலைவருக்கே இந்த கதி என்றால், பொதுமக்கள் நிலையை கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்.