இந்திய மருந்தின் மீது இந்தியர்களே சந்தேகம் கொள்ளும்படி மீடியா வதந்தி பரப்புகின்றது - உலக மருந்து சந்தை செய்யப்போகும் சதி!
By : Muruganandham
இந்திய மருந்தின் மீது இந்தியர்களே சந்தேகம் கொள்ளும்படி, மீடியா வதந்தி பரப்புகின்றது. ஆளும் அரசுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர்கள் அந்த ஊடகத்திற்கு ஆதரவாக செயல்படுகின்றனர்.
கடந்த டிசம்பரில் இருந்தே அமெரிக்க நிறுவனமான பைசர் பார்மா, தன்னுடைய தடுப்பூசியை இந்திய சந்தையில் தள்ள எல்லா பேச்சுவார்தையும் நடக்கிறது. ஆனாலும் மோடி தலைமையிலான அரசு இந்திய தயாரிப்பான கோவிஷீல்டு,கோவாக்ஸின்க்கு மட்டுமே அனுமதி கொடுத்தது. அதுமட்டுமல்ல மக்களுக்கு இலவசமாக தந்துதவுகிறது..
கூடுதலாக உலகம் முழுக்க 94 நாடுகளுக்கு 36% தடுப்பு மருந்தை இந்தியா கொடுத்து உதவியிருக்கிறது.உலக சுகாதார நிறுவனம் இந்தியாவின் எழுச்சியும் சேவையும் மறுக்க முடியாதது என்று பாராட்டியிருந்தது. இந்த வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத மருத்துவ லாபிகள் இந்தியா என்கிற சந்தையை ஒரு இக்கட்டான நிலையில் அழுத்தம் கொடுத்து பிடித்துவிட வேண்டும் என்று நினைக்கிறது.
எப்போதும் அமெரிக்க மருத்துவ சந்தையில் முன்னிலை வகிக்க பார்க்கும். இப்போது அந்த பிம்பத்தை உடைத்து, இந்தியா உலக அளவில் முதன்மை நாடாக விளங்குகிறது.
இதன் தொடர்ச்சியாகவே மருந்துகளுக்கான மூலப்பொருள் அனுப்புவதில் தடை போன்ற ஏராளமான இடையூறுகள் ஏற்பட்டன. தற்போது அமெரிக்க ஊடகங்கள் மூலம் இந்தியாவிற்கு எதிரான பிம்பம் கட்டமைக்கப்பட்டு வருகிறது.
பைசர் நிறுவன மருந்து ஒன்று, இந்திய மெடிக்கலில் 840ரூபாய் விலையில் விற்கப்படும் நிலையில், அதே இந்த தயாரிப்பு மருந்து வெறும் 20ரூபாயில் மக்கள் மருந்தகத்தில் கிடைக்கிறது.
இந்த நிறுவன மாத்திரைகள் பொது சந்தையில் விலை அதிகம் என்கிற போது..இவர்களுடைய தடுப்பூசி விலை எவ்வளவு விற்கும்?சலுகை விலையில் வருகிறேன் என்று நுழைந்தால் கூட அடுத்து என்ன செய்வார்கள் என்று தெரியாதா? இதில் இரண்டு டோஸ் எடுத்தால் போதாதாம். அது உருமாறி வந்தால் மீண்டும் புதிய ஊசி போட வேண்டுமாம்.