ட்விட்டரில் 'ஐஸ்பாய்' விளையாடும் தி.மு.க எம்.பி.செந்தில்குமார் - தண்ணி காட்டும் நெட்டிசன்கள்!
By : Mohan Raj
இணையம் என்பது இன்று அனைவரின் கையிலும் உள்ள ஓர் ஆயுதமாகிவிட்டது. இதில் அரசியல் முதல் அன்றாட வாழ்வு நிகழ்வுகள் வரை பதிவேற்றுவது, கமெண்ட் செய்வது, வரலாற்றை கேள்வி கேட்பது, நிகழ்கால சம்பவங்களை நகைப்பது என சமானிய மனிதன் கூட தனது சமூக வலைதள கணக்கின் மூலம் சுலபமாக செய்துவிடுகிறான். ஆனால் ஒரு தொகுதியின் எம்.பி தனது ட்விட்டர் பதிவில் ஒருவர் செய்த நகைப்புக்குரிய விஷயத்தை ஊதி பெரிதாக்கியதன் மூலம் இன்று தமிழக ட்விட்டர் களமே அந்த விஷயத்தை உற்று நோக்கும் அளவிற்கு செய்துவிட்டார்.
தர்மபுர் தி.மு.க எம்.பி.செந்தில்குமார் மருத்துவம் படித்தவர், சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவழித்து எந்நேரமும் உயிர்ப்புடன் இருப்பவர். இவரை தொடர்பு கொள்ள இவரின் அலுவலகமோ, மருத்துவமனையோ, வீட்டிற்கோ செல்ல வேண்டிய அவசியம் இல்லை ட்விட்டரில் இவரின் ஐடி'யை குறிபிட்டு தொடர்புகொண்டால் போதும் உடனே என்னவென்று கேட்பார் அந்தளவிற்கு சமூக வலைதளத்தில் எம்.பி பணி, மருந்துவ பணி, தன் குடும்பம் என அனைத்தையும் இரண்டாம் கட்டமாக வைத்துவிட்டு சமூக வலைதளமே முழு மூச்சாக இயங்கி வருபவர்.
இப்படி முழுமூச்சாக இயங்குபவரை அவ்வபொழுது சிலரின் ஐடி'க்கள் கோபமடைய செய்துவிடுகின்றன. இவருக்கு எப்படி அனைத்து விதமான கருத்துக்கள் கூற உரிமை உள்ளதோ அதுபோல் அனைவருக்கும் அனைத்து விதமான கருத்துக்களை கூற உரிமை உள்ளது என மறந்து இவர் கோபப்பட்டுவிடுவார்.
இதுபோல் நேற்று முன்தினம் ஒரு ஐடி'யில் தி.மு.க'வின் மறைந்த தலைவர் கருணாநிதி பற்றி ஒருவர் விமர்சனத்தை வைத்திருந்தார். உடனே பொங்கியெழுந்த எம்.பி.செந்தில்குமார் அதனை சைபர் க்ரைம் போலீசாருக்கு குறிப்பிட்டு புகார் அளித்துவிட்டார். உடனே விமர்சனம் செய்தவரும் அதனை தவறு என ஒப்புக்கொண்டுவிட்டார். ஆனால் இதில் குறிப்பிடதக்க விஷயம் என்னவென்றால் இதைவிட கேவலமான விமர்சனங்களை இவர் பின்தொடரும் அல்லது இவரை பின்தொடரும் தி.மு.க சார்பு ஐடி'க்கள் முன்வைத்த பொழுது பேசாமல் கடந்து சென்றவர் தற்பொழுது பொங்கியெழுந்த காரணம் புரியவில்லை.
இதனையடுத்து ட்விட்டரில் இந்த சம்பவத்தை குறிப்பிட்டு நெட்டிசன்கள் எம்.பி.செந்தில்குமார் ஐடியையும் குறிப்பிட்டு நேற்று இரவு முதலே ட்ரெண்டிங்கில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவரும் சளைக்காமல் தான் ஒரு எம்.பி என்பது கூட நினைவில்லாமல் காலை முதல் அனைத்து கமெண்ட்களுக்கும் மறுபதிவு செய்துகொண்டிருக்கிறார்.
"தீதும், நன்றும் பிறர்தர வாரா" என்பது கூடவா ஒரு எம்.பி'க்கு தெரியாது?