Kathir News
Begin typing your search above and press return to search.

ஒட்டக சிறுநீர் உடலுக்கு நல்லது - மத போதகரின் அறிவுரையால் சர்ச்சை.!

ஒட்டக சிறுநீர் உடலுக்கு நல்லது - மத போதகரின் அறிவுரையால் சர்ச்சை.!
X

Yendhizhai KrishnanBy : Yendhizhai Krishnan

  |  23 May 2021 1:16 PM IST

பா.ஜ.க-வுக்கு வாக்களிக்கும் மாநிலங்களையும் மக்களையும் கோமியம் குடிப்பவர்கள் என்று கூறுவதில் 'கடவுள் மறுப்பாளர்கள்' என்று கூறிக் கொள்பவர்களுக்கு அப்படி ஒரு ஆனந்தம். இவர்களின் கொள்கையை சோதிக்கும் வகையில் பிரபல இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் ஒட்டக சிறுநீரைக் குடிப்பதால்‌ கிடைக்கும் நன்மைகள் குறித்து வெளியிட்டுள்ள வீடியோ அமைந்துள்ளது.

இந்த வீடியோவில் இஸ்லாமியர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த ஜாகிர் நாயக் ஒட்டக சிறுநீரின் சிறப்பு குறித்து குரானில் என்ன கூறப்பட்டுள்ளது என்று விளக்கியுள்ளார். அதில் "ஒட்டக சிறுநீரைக் குடிப்பதால் மனிதர்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன என்று நிரூபிக்கும் வகையில் பல ஆய்வுகள் இருக்கின்றன" என்று வேறு கூறி இருக்கிறார்.

இதற்கு இபின் சினா என்ற பழங்கால ‌பெர்சிய வைத்தியர் கூறியவற்றை எடுத்துக் காட்டாக கூறிய ஜாகிர் நாயக், "சிறுநீரிலேயே நல்ல பலன் தரக் கூடியது ஒட்டக சிறுநீர் தான். இன்று ஒட்டக சிறுநீரை ஆய்வு செய்த பின்னர் அதில் பொட்டாசியமும் அல்புமினஸ் புரோட்டீனாகளும் இருப்பதாகக் கண்டுபிடித்தோம். இது போக யூரிக் ஆசிட், சோடியம் மற்றும் கிரியாட்டின் இருப்பதையும் கண்டுபிடித்தோம்" என்று அவர் எழுதி வைத்திருப்பதாக கூறியுள்ளார்.

அப்துல் பதே மெஹமூத் இட்ரிஸ் என்பவர் செய்த ஆய்வின் படி சில தோல் வியாதிகளுக்கு மருந்தாக ஒட்டக சிறுநீரைப் பயன்படுத்தலாம் என்று கூறி இருப்பதாகவும், அது முடியை அடர்த்தியாகவும் அழகாகவும் ஆக்கும் என்று அறிவியல் ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளதாகவும் நாயக் பேசியுள்ளார். பின்னர் ஆலம் அல் அவதி என்ற நுண்ணுயிர் ஆராய்ச்சியாளரின் ஆய்வு குறித்து பேசிய ஜாகிர் நாயக் அவரது ஆய்வு ஒட்டக சிறுநீர் மஞ்சள்காமாலையைக் கூட குணப்படுத்தும் என்று நிரூபித்ததாகக் கூறியுள்ளார்.

மற்றொரு மருத்துவர், குர்ஷித், ஒட்டக சிறுநீரில் புற்றுநோயை எதிர்க்கும் சக்தி இருப்பதாகவும் எனவே புற்றுநோய் சிகிச்சையில் அதைப் பயன்படுத்தலாம் என்றும் கூறுவதாக சுட்டிக் காட்டிய ஜாகிர் நாயக், குரான் மற்றும் ஹடித்துகளில் கூறப்பட்டுள்ள அனைத்தையும் அப்படியே நம்புமாறு ஊக்குவித்துள்ளார்.

"ஹடித்தை நம்ப வேண்டுமா கூடாதா என்பதை அறிவியல் தீர்மானிக்கக் கூடாது. அறிவியல் ஒரு விஷயத்தை உண்மை என்று நினைக்கிறதோ இல்லையோ, ஹடித்தில் சொல்லபப்ட்டு இருந்தால் நாம் அதை நம்ப வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு 5686ஆம் ஹடித்தில் ஒட்டகத்தின் பாலையும் சிறுநீரையும் குடித்து இளைப்பாறுமாறு கூறப்பட்டுள்ளதையும் மேற்கோள் காட்டியுள்ளார்.

Source : OpIndia

Next Story
கதிர் தொகுப்பு
Trending News