Kathir News
Begin typing your search above and press return to search.

காஷ்மீர், லடாக் பகுதிகளை இந்திய வரைபடத்திலிருந்து நீக்கி புதிய சர்ச்சையில் சிக்கிய ட்விட்டர்!

காஷ்மீர், லடாக் பகுதிகளை இந்திய வரைபடத்திலிருந்து நீக்கி புதிய சர்ச்சையில் சிக்கிய ட்விட்டர்!

MuruganandhamBy : Muruganandham

  |  29 Jun 2021 1:15 AM GMT

ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபரில் யூனியன் பிரதேசமான லடாக்கை சீனாவின் பகுதியாக ட்விட்டர் மேப் காட்டிய நிலையில், மீண்டும் ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதிகளை வேறு நாடாக காட்டி புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது ட்விட்டர் நிறுவனம்.

காஷ்மீர், லடாக் பகுதிகளால் பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் சர்ச்சை நீடித்து வரும் நிலையில் ட்விட்டர் நிறுவனத்தின் செயல்பாடு மத்திய அரசு வட்டாரத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.


முன்னதாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய தொழில்நுட்ப விதிகளுக்கு உடன்படாமல், அரசுக்கு எதிராக மோதல் போக்கை கையாண்டது. பின்னர் மத்திய அமைச்சர்களின் ட்விட்டர் கணக்குகளை முடக்குவது அரசுக்கு விரோதமாக நடந்து கொண்டது. மேலும் நீல நிற டிக்கை நீக்குவது போன்ற செயல்களில் இறங்கி மத்திய அரசின் எதிர்ப்பையும் அந்நிறுவனம் பெற்றது.

இந்த நிலையில், தற்போது இந்தியாவின் ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதிகளை இந்திய வரைபடத்தில் இருந்து தூக்கியது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களை தன்னுடைய மேப்பில் தனி நாடாக காட்டியுள்ளது ட்விட்டர். அந்நிறுவனத்தின் கேரியர்ஸ் பகுதியில் Tweep Life என்ற பேஜின் கீழ் இந்தியாவின் தவறான மேப் காட்டப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News