உண்மை விவசாயி இதை பண்ணுவாங்களா? பா.ஜ.க தலைவரின் நெல் நாற்றுகளை பிடுங்கி எறிந்த விவசாய சங்கத்தினர்!
By : Muruganandham
பா.ஜ.க பிரமுகரான ஹர்ஜீத் சிங் என்பவருக்கு பஞ்சாப் மாநிலம் பர்னாலா மாவட்டத்தில் உள்ள தனுவாலா எனும் கிராமத்தில் விவசாய நிலம் உள்ளது.
அதில் நெல் நாற்றுகள் நடவு செய்யப்படிருந்தன. இந்நிலையில் சம்யுக்தா கிசான் மோர்ச்சா, பாரதிய கிசான் யூனியன் என்ற இரு விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள், கைகளில் கொடியுடன், விவசாய நிலத்திற்குள் புகுந்து தங்கள் கைகளால் நெல் நாற்றுகளை பிடுங்கி எறிந்ததுடன், டிராக்டர் மூலமும் நிலத்தை நாசப்படுத்தியுள்ளனர்.
ஏற்கனவே விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்களை பா.ஜ.க தலைவர் ஹர்ஜீத் சிங் விமர்சித்துள்ளார். இதன் காரணமாக அவரின் நிலத்தை யாரும் குத்தகைக்கு வாங்கக்கூடாது என விவசாயிகள் எச்சரித்திருந்தனர்.
இந்த நிலையில் அவரே நிலத்தில் நெல் நாற்று நடவு செய்திருந்ததையறிந்து அங்கு சென்று இந்த அட்டூழிய செயலில் அவர்கள் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.