Kathir News
Begin typing your search above and press return to search.

ரத்தக்களறி ஆக மாறிய கடற்கரை: சமூக வலைத்தளங்களில் வலுக்கும் எதிர்ப்புகள்!

பாரம்பரிய திருவிழாவிற்காக ஃபேரோ தீவில் தற்பொழுது டால்பின்களின் உயிர் இழப்பின் காரணமாக ரத்தக்களறியாக மாறியுள்ளது.

ரத்தக்களறி ஆக மாறிய கடற்கரை: சமூக வலைத்தளங்களில் வலுக்கும் எதிர்ப்புகள்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  15 Sept 2021 6:35 PM IST

தற்போது வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஃபேரோ தீவு உள்ளது. இந்தத் தீவில் சுமார் ஒரே நாளில் 1,400க்கும் மேற்பட்ட டால்பின்கள் கொன்று குவிக்கப்பட்ட நிகழ்விற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஃபேரோ தீவு மக்கள் பாரம்பரிய திருவிழாவை கொண்டாடினர். இந்த விழாவில் ஒரு பொதுவான பழக்கம் என்னவென்றால், மீன்கள் கரைக்கு பிடித்து வரப்பட்டு பிறகு அவற்றை நரபலி கொடுப்பது.


இதன் காரணமாக படகுகள் மூலம் 1,428 டால்பின்களை பிடித்து கரைக்கு எடுத்து வந்தனர். பின்னர் அவற்றை ஒவ்வொன்றாக கொன்று குவித்தனர். மேலும் இதன் காரணமாக தற்போது இந்த கடற்கரை தண்ணீர் முழுவதும் சிவப்பு நிறமாக ரத்தக்களறி ஆக மாறியுள்ளது. இதற்கு உலகம் முழுவதும் பல்வேறு தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். குறிப்பாக மீன்வள ஆர்வலர்கள் இதற்கு தங்களுடைய முழுமையான எதிர்ப்பை சுட்டிக்காட்டியுள்ளார்கள்.


மற்ற மீன்களைப் போல் அல்லாமல் டால்பின்கள் மிகவும் மனிதர்களுடன் நெருக்கமாக பழக கூடிய ஒரு மீன் இனம். ஆனால் இதை இன்று மனிதனால் கொல்லப் படுகிறது தான் வேதனைக்குரிய விஷயம். கடற்கரைப் பகுதி நீர் முழுவதும், ரத்தம் சிந்தப்பட்டு சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது, ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான டால்பின்கள் கொல்லப்பட்டதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இதுபோன்று, கடல்வாழ் உயிரினங்களை கொன்று குவித்த இந்த திருவிழாவிற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Input & Image Courtesy: India Today

Next Story
கதிர் தொகுப்பு
Trending News