Kathir News
Begin typing your search above and press return to search.

அனுமதிக்கப்படும் சுற்றுலாபயணிகள், நிராகரிக்கப்படும் பக்தர்கள்: பாரபட்சம் காட்டுவது ஏன்?

விருதுநகர் உள்ள வன கோயிலில் பக்தர்கள் அனுமதி நிராகரிக்கப்பட்டது தொடர்பாக வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்படும் சுற்றுலாபயணிகள், நிராகரிக்கப்படும் பக்தர்கள்: பாரபட்சம் காட்டுவது ஏன்?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  1 Oct 2021 1:08 PM GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் உள்ள இடையன்குளம் என்ற கிராமத்தில் வசிக்கும் மக்கள் அங்கு உள்ள வன தெய்வங்களை வணங்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சில ஆண்டுகளாகவே இவர்களுக்கு இந்த அனுமதி மறுக்கப்பட்டு வருகிறதாம். அதுவும் குறிப்பாக வனங்களுக்குள் நுழைந்து பக்தர்கள் சாமி கும்பிடுவதை அங்கு இருக்கும் வன அதிகாரிகள் அனுமதிப்பது இல்லை என்பது போன்ற குற்றச் சாட்டுகளையும் இவர்கள் முன் வைத்துள்ளார்கள். குறிப்பாக அங்கு இருக்கும் அருள்மிகு பெமலையம்மன், ராக்கட்சி அம்மன் என்ற மலைக் கடவுளின் ஒரு பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் உள்ளது. இந்தப் பகுதி அங்கு இருக்கும் மாவட்ட வன அலுவலர் மற்றும் வன பாதுகாவலரின் கட்டுப்பாட்டில்தான் இருந்து வருகிறது.


ரிசர்வ் காடு பகுதியில் அமைந்துள்ள சமூக தெய்வத்தை வழிபட அனுமதி கோரி கிராம மக்கள் ஒரு மனுவை கொடுத்துள்ளார்கள். அக்டோபர் மாதத்தில் ஒதுக்கப்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ள கோவிலை வழிபட அனுமதி கோரி அருள்மிகு பெமலையம்மன் பக்தர்களின் கோரிக்கையை அதிகாரிகள் பரிசீலிக்குமாறு சென்னை உயர் நீதிமன்ற மதுரை பெஞ்ச் திங்கள்கிழமை உத்தரவிட்டது. ரிசர்வ் வனப் பகுதிக்குச் செல்ல அனுமதி சுற்றுலா பயணிகளுக்கு வழங்கும் போது அங்கு கடவுள் வழிபாட்டின் காரணமாக செல்லும் பக்தர்களுக்கும் கண்டிப்பாக வழங்க வேண்டும் என்பது போன்ற முடிவையும் பெஞ்ச் வழங்கி உள்ளது.


அக்டோபர் மாதம் அதாவது தமிழ் மாத படி புரட்டாசியில் அங்கு உள்ள ராக்கட்சி அம்மன் கோவிலில் அருள்மிகு பெமலையம்மன் அம்மனை வழிபடுவதற்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாத புரட்டாசி மாதத்தில் அதாவது அக்டோபர் முதல் நவம்பர் வரை, பக்தர்கள் அங்கு வந்து கடவுளை வணங்கும் பழக்கத்தை மேற் கொள்வார்கள். கிராம மக்களின் கருத்துப்படி இந்துப் என பல நூற்றாண்டுகளாக நடந்து வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இருப்பினும் கடந்த சில ஆண்டுகளில், அந்த மக்கள் வன நிலத்திற்குள் நுழைவதற்கும், பண்டிகைக் காலத்தில் தெய்வத்தை தரிசிப்பதற்கும் வனத்துறை அனுமதி வழங்கவில்லை என்று தெரிகிறது. ஆகவே பக்தர்களின் கோரிக்கையை 2 வாரங்களுக்குள் முடிவு செய்யுமாறு அரசு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Input & Image courtesy:Lawbeat



Next Story
கதிர் தொகுப்பு
Trending News