Kathir News
Begin typing your search above and press return to search.

ஹலால் இல்லாத உணவகத்தை திறந்த பெண் மீது குற்றச்சாட்டு: கைது செய்த கேரள காவல்துறை !

ஹலால் இல்லாத உணவகத்தை திறந்து கேரள பெண் மீது பொய்யான குற்றச்சாட்டு வைக்கப்பட்டு கேரள காவல்துறையினர் கைது செய்துள்ளது.

ஹலால் இல்லாத உணவகத்தை திறந்த பெண் மீது குற்றச்சாட்டு: கைது செய்த கேரள காவல்துறை !
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  5 Nov 2021 1:55 PM GMT

பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்லாமிய சட்டத்திட்டத்தின் படி, ஹலால் உணவை மட்டுமே சாப்பிட வேண்டும். பலரும் ஹலால் என்றால் சுத்தம் என்று நினைக்கிறோம். ஆனால் அது தான் தவறு. ஹலால் என்பதன் உண்மையான அர்த்தமே வேறு. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், ஹலால் என்பது உணவுக்காக கொல்லப்படும் விலங்குகளின் கொல்லும் முறையைக் குறிக்கும். அந்த முறையின் படி உண்ணும் விலங்குகள் கொல்லப்பட்டால் மட்டுமே இஸ்லாமியர்கள் அந்த இறைச்சியை உண்பார்கள். எனவே இத்தகைய ஹலால் முறையில் எதிர்க்கும் விதமாக கேரள பெண் ஒருவர் ஹலால் இல்லாத உணவகத்தை திறந்திருக்கிறார்.

ஹலால் அல்லாத உணவகத்தின் உரிமையாளர் மற்றும் அவரின் கூட்டாளிகள் மீது கொச்சி காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. நவம்பர் 2 அன்று கைது செய்ததாக கூறப்படும், கேரளாவை சேர்ந்த கோட்டயம் மாவட்டத்தில் இருந்து துஷார, ஹலால் அல்லாத உணவு விற்கும்பெண், அவரது கணவர் அஜித் மற்றும் இரண்டு கூட்டாளிகள் அப்பு மற்றும் சுனில் ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். துஷாராவுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 152A (வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


துஷாரா தனது முதல் ஹலால் அல்லாத உணவகத்தை ஜனவரி 2021 இல் திறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. "பல இஸ்லாமியர்கள் ஹலால் அல்லாத உணவகத்தை நடத்தும் இவர் மீது கோபமாக இருந்துள்ளார்கள். இது சரியல்ல என்று முஸ்லிம்கள் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இந்துக்கள் எந்த தொழிலை தொடங்கும் போதெல்லாம், முஸ்லிம்கள் தலையிட முயற்சி செய்கிறார்கள்" என்று ஒன்றரை ஆண்டுகளாக உணவகத்தை நடத்தி வரும் துஷாரா கருத்து தெரிவித்தார். இருப்பினும் 'நோ-ஹலால்' பலகை உள்ளூர் மக்களை எரிச்சலடையச் செய்தது. மேலும் அவர் சில குண்டர்களால் தாக்கப்பட்டார்.


அவரது ஹலால் அல்லாத உணவகத்தின் இரண்டாவது கிளையைத் திறப்பதற்காக அவருக்கு அச்சுறுத்தல்கள் வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள கேரள பா.ஜ.க மாநிலத் தலைவர் கே. சுரேந்திரன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது, "திருமதி. துஷாரா, அஜித்துக்கு எதிரான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். பெண் தொழிலதிபரின் ஹோட்டலில் ஹலாலுக்கு இணங்காத காரணத்தால் முஸ்லிம் வெறியர்கள் குழுவொன்று கொடூரமாக தாக்கியுள்ளனர். ஹலால் படையெடுப்பை நிராகரிக்குமாறு கேரள மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன்" என்றும் கூறியுள்ளார்.

Input & Image courtesy:Opindia


Next Story
கதிர் தொகுப்பு
Trending News