Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவில் உருவாகும் அடுத்த தூய்மையான நதி: மத்திய ஜல் சக்தி துறையின் மற்றொரு சாதனை !

பார்ப்பதற்கு கண்ணாடி போன்று தெரியும் இந்த நதியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

இந்தியாவில் உருவாகும் அடுத்த தூய்மையான நதி: மத்திய ஜல் சக்தி துறையின் மற்றொரு சாதனை !
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  20 Nov 2021 2:13 PM GMT

தமிழகத்தில் நொய்யல் நதி, டெல்லி யமுனை போன்ற பல்வேறு நீர்நிலைகளில் தொடர்ந்து மாசுக்களால் நுரை பொங்கி சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதற்கு ராசயன கழிவுகள் ஆற்றில் திறந்து விடுவது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் மேகாலயாவில் உள்ள ஆற்றின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த நதியின் புகைப்படத்தை மத்திய ஜல் சக்தி துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.


இதுகுறித்து மத்திய ஜல் சக்தி துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில் இதுபற்றி கூறுகையில், "உலகின் மிகவும் சுத்தமான நதிகளில் ஒன்று இந்தியாவில், மேகாலயாவின் ஷில்லாங்கில் இருந்து 100 கி.மீ தொலைவில் அமைந்துள்ள உம்ங்கோட் நதி என்று குறிப்பிட்டிருந்தது. இதில் தண்ணீர் தெளிவாகவும், சுத்தமாகவும் இருப்பதால் படகு காற்றில் பறப்பது போல தெரிகிறது. அனைத்து நதிகளும் இது போன்று தூய்மையாக இருக்க வேண்டும். இந்த நதியை தூய்மையாக வைத்திருக்கும் மேகாலயா மக்களுக்கு ஹாட்ஸ் ஆப்" என்று குறிப்பிட்டுள்ளனர்.




அந்த புகைப்படத்தில் இருக்கும் நதி மிகவும் சுத்தமாக உள்ளது. மேலும் நீருக்குஅடியில் இருக்கும் கூழாங்கற்கள் கூட மிகவும் தெளிவாக தெரிகிறது. அதில் ஐந்து பேர் அமர்ந்து கொண்டிருக்க படகு ஒன்று அந்த ஆற்றில் பயணித்துச் செல்கிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இதனை வைரலாக்கி வருகின்றனர். இவ்வளவு பசுமையான, தெளிவான நதி கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளதாக பலரும் தங்களுடைய கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

Input & Image courtesy:India news



Next Story
கதிர் தொகுப்பு
Trending News