தனி விமானத்தில் செல்லும் அளவுக்கு பால் தினகரனுக்கு பணம் வந்தது எப்படி? ரகசியம் உடைக்கும் அர்ஜூன் சம்பத்!
By : Kathir Webdesk
எந்த இடத்திலும் கிறிஸ்தவர்கள் தசமபாகம் கொடுக்கவேண்டும் மற்றும் அதை வழக்கமாக்கி கொள்ளவேண்டும் என்கிறதான கட்டளையும் இல்லை பரிந்துரையும் இல்லை. மேலும் புதிய ஏற்பாட்டில் தசமபாகம்-அதாவது தன் வருமானத்தில் சில சதவீதம் எடுத்து வைக்க வேண்டும் எனவும் கூறவில்லை சில சர்ச்சுகள் வேண்டுமென்றே கட்டாயப்படுத்துகின்றன.
மாறாக "தன்தன் வரவுக்குத் தக்கதாக எதையாகிலும் தன்னிடத்திலே சேர்த்துவைக்கக்கடவன்" (1 கொரிந்தியர் 16:2) என்றுதான் கூறுகிறது.
ஆனால் சில கிறிஸ்தவ சபைகளில் பழையேற்பாட்டில் கூறப்பட்ட 10 சதவிகிதத்தை எடுத்துக்கொண்டு, குறைந்தபட்சம் இத்தனை சதவிகிதம் கொடுக்கவேண்டும் பரிந்துரைக்கிறார்கள்.
கிறிஸ்தவ பள்ளிகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் போன்றவை வெளிநாட்டு பணத்தில் இயக்குவதாக நினைத்துக்கொண்டிருக்கிறோம். அது ஒரு பகுதி என்றாலும், சர்ச்சுக்கு வரும் மக்களிடம் இருந்தும் குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படுகிறது.
பால் தினகரன் போன்ற மத போதகர்கள் தனி விமானம் வைத்து வெளிநாடு செல்லும் அளவுக்கு உயரக்காரணம் இது போன்ற தசமபாகத்தில் இருந்து வரும் பணத்தை வைத்தே என்கிறார் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்.
கடந்த மாதம் கூட சென்னை தனியார் பள்ளியில் வேன் மோதி ஒரு சிறுவன் இறந்த நிலையில், அவனது உடலை அடக்கம் செய்ய, தசமபாகம் செலுத்தி இருந்தால் மட்டுமே அனுமதி கிடைக்கும் என சர்ச் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.