உலக நாடுகள் கூடிய அரங்கில் பிரதமர் மோடியை தேடிச் சென்று வரவேற்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!

By : Kathir Webdesk
ஜி20 மாநாட்டின் துவக்கத்தில் பிரதமர் மோடியை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தேடிச்சென்று கைகுலுக்கி வரவேற்றார். இந்த வீடியோ வைரலாகியுள்ளது.
ஜி20 நாடுகளின் 17வது உச்சி மாநாடு இந்தோனேஷியாவின் பாலி நகரில் தொடங்கியது.
இதில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷி சுனக் உள்ளிட்ட பல நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர்.
மாநாட்டின் துவக்கத்தில் தலைவர்கள் இருக்கையில் அமர தயாராகினர். அப்போது பிரதமர் மோடி அருகே வேகமாக சென்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனிப்பட்ட முறையில் கைகுலுக்கி, கட்டித்தழுவி வரவேற்றார்.
இருவரும் சில வினாடிகள் உரையாடினர். அதன் பின்னர் மற்ற நாட்டு தலைவர்கள் பைடன் இருக்கை அருகே வந்து அவரை வரவேற்றனர். இதனைத்தொடர்ந்து பைடன், மோடியின் இருக்கை அருகே அமர்ந்தார்.
முன்னதாக ஜெர்மனியில் ஜி7 நாடுகள் உச்சி மாநாட்டின்போதும், புகைப்படம் எடுக்கும் நிகழ்வில் பிரதமர் மோடி, கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோவுடன் பேசிக் கொண்டிருந்தபோது, மோடியை தேடி சென்று அவரது தோளை தட்டி அழைத்த பைடன், தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
