Kathir News
Begin typing your search above and press return to search.

"கிறிஸ்தவம் என்பது மதமே இல்லை, என்ன விட்ருங்கப்பா" - பத்திரிகையாளர்கள் முன் பம்மிய மத பிரச்சார இயக்குனர் பிரபு சாலமன்!

கிறிஸ்தவம் என்பது மதமே இல்லை, என்ன விட்ருங்கப்பா - பத்திரிகையாளர்கள் முன் பம்மிய மத பிரச்சார இயக்குனர் பிரபு சாலமன்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  31 Dec 2022 7:48 AM IST

செம்பி படத்தின் மூலம் கிறிஸ்தவ மதத்தை பரப்புறீங்களா என சில பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்ட நிலையில், கிறிஸ்தவம் என்பது ஒரு மதமே கிடையாது என இயக்குனர் பிரபு சாலமன் கூறினார்.

செம்பி படத்தின் முடிவில் ”உன்னிடத்தில் செலுத்தும் அன்பை பிறரிடத்தில் செலுத்து – இயேசு” என்கிற வாசகத்துடன் படத்தை இயக்குநர் பிரபு சாலமன் முடித்துள்ளார். உலகில் கிறிஸ்தவம் மட்டுமே அன்பை போதிப்பது போல முடித்தது ஏன்? என்கிற கேள்வியை எழுப்ப இயக்குநருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் வெடித்தது.

அப்போது தான் பின்பற்றும் கருத்துக்களை படத்தில் வைத்துள்ளேன் என்றும், கிறி ஸ்துவம் முதலில் ஒரு மதமே கிடையாது. அது மனித வாழ்வின் ஒரு வெளிப்பாடு என பேசியது மேலும், பிரச்சனையை பெரிதாக்கி உள்ளது.

இதே போதனைகள் பகவத் கீதையிலும் இடம்பெற்றுள்ளதாக செய்தியாளர்கள் குறிப்பிட்ட போது, அந்த போதனைகளை படித்து வளர்பவர்கள் அதை தங்கள் படங்களில் வைக்கலாம் என்றும், தான் படித்து, வளர்ந்த விஷயங்களின் வெளிப்பாடு தான் தனது திரைப்படம் என்றும் தெரிவித்தார்.

Input From: DT

Next Story
கதிர் தொகுப்பு
Trending News