பிரிட்டன் பாராளுமன்றத்தில் பிரதமர் மோடியை புகழ்ந்து பேசிய எம்.பி!
By : Kathir Webdesk
குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி லண்டன் இரண்டு பகுதி ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. முதல் எபிசோட் கடந்த செவ்வாய்க்கிழமை ஒளிபரப்பப்பட்டது. இரண்டாவது எபிசோட் வரும் 23ம் தேதி ஒளிபரப்பாகும், இந்த ஆவணப்படத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலளிக்கும் வகையில், பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது, ஆவணப்படத்தில் உள்ள தகவல்களுடன் நீங்கள் உடன்படுகிறீர்களா என்று எம்.பி இம்ரான் ஹுசைன் பிரிட்டன் பிரதமரிடம் கேட்டார்.
இதற்குப் பதிலளித்த பிரதமர் ரிஷி சுனக், மக்கள் எங்கும் துன்புறுத்தப்படுவதை இங்கிலாந்து அரசு பொறுத்துக் கொள்ளாது. ஆனால் ஆவணப்படத்தில் பிரதமர் மோடியைப் பற்றி முன்வைக்கப்பட்ட அனைத்து கருத்துக்களுடன் உடன்பட முடியாது என்று கூறினார்.
இந்த நிலையில், மற்றொரு எம்.பி.யான கரன் பிலிமோரியா பிரதமர் மோடியை புகழ்ந்து பேசினார். மோடி இந்தியாவின் பிரதமராக இந்த உலகில் மிகவும் சக்திவாய்ந்தவர்களில் ஒருவராக திகழ்கிறார்.
அவரது நிர்வாகத்தால் இன்று இந்தியா ஜி 20 அமைப்பிற்கு தலைமை ஏற்றுள்ளது அடுத்த 25 ஆண்டுகளில் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமிக்க நாடாக மாறும் தொலை நோக்கு பார்வையை இந்தியா கொண்டுள்ளது. பிரிட்டனின் நெருங்கிய நட்புறவு நாடாகவும் இந்தியா உள்ளது என் கூறினார்.