அப்போ எல்லாமே நடிப்பா கோபால்? பட்டியல் சமூகத்தை அவமதித்த நபருக்கு திருமா ஆதரவு!
By : Kathir Webdesk
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். அவர் ஒரு மோசமான முன்மாதிரி என்று கருதுவதால், திமுக கட்சியைச் சேர்ந்த பலர் அவர் போட்டியிடுவதற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
ஆனால் இளங்கோவனுக்கு, வி.சி.க. தலைவர் திருமாவளவன் தனது ஆதரவினை வழங்கியிருக்கிறார். ஏற்கனவே பல முறை பட்டியல் இன மக்களை அவமதித்து பேசியவர் இளங்கோவன்.
பட்டியல் இனத்தை சேர்ந்த இளையராஜாவை பார்த்து பணம் வந்துவிட்டால் நீ உயர்சாதி ஆகிவிட முடியாது. தமிழகத்தில் சில அகராதிகள் இருக்கிறாங்க. கேட்டால் உண்மையிலேயே நான் இசை மன்னன் என்று சொல்லி கொள்கிறார்கள். இசை மன்னன் யார் என்று எல்லோருக்கும் தெரியும். தபேலா எடுத்து அடிக்கிறவர்கள் எல்லாம் இசைஞானி ஆகிவிட முடியாது.
வறுமையில் சாப்பாட்டுக்கே வழி இல்லாத போது கம்யூனிச சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்வதும், பணமும், புகழும் வந்த பிறகு தன்னை உயர்ஜாதி என நினைத்து கொள்வதும் என்ன நியாயம். நான் யாரை சொல்றேன்னு உங்களுக்கே தெரியும் என பேசி இருந்தார்.
இப்போது பட்டியல் சமூகத்தின் ஒரே தலைவர் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் திருமாவளவன், இளங்கோவனை ஆதரிப்பதாக கூறி அரசியல் ஆதாயத்தை தேடிக்கொண்டார்.