Kathir News
Begin typing your search above and press return to search.

நீ எப்படி டா கோயிலுக்குள் போன? பட்டியலின வாலிபரை கெட்ட வார்த்தையால் திட்டிய தி.மு.க நிர்வாகி!

நீ எப்படி டா கோயிலுக்குள் போன? பட்டியலின வாலிபரை கெட்ட வார்த்தையால் திட்டிய தி.மு.க நிர்வாகி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 Jan 2023 3:05 PM GMT

சேலம் மாவட்டம் திருமலைகிரி பகுதியில் உள்ள அம்மன் கோவிலுக்குள் பட்டியலினத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் சென்றதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அந்த இளைஞரை திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம், கோவிலுக்குள் அவர் சென்றதை கண்டித்து ஊர் மக்கள் முன்பு நிற்கவைத்து ஆபாசமாக திட்டினார்.

திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம் கொச்சையாக இளைஞரை திட்டிய வீடியோ வைரலாக பரவியது. சமூகநீதி, தீண்டாமை ஒழிப்பு பற்றி பேசிவரும் திமுகவினரே இப்படி தீண்டாமையை கடைபிடிப்பது வெட்கக்கேடு என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு ஒருபுறம் நடக்க, சேலத்தில் திமுக ஒன்றிய செயலாளர் ஒருவர், பட்டியலின இளைஞர் கோவிலுக்குள் நுழைந்ததற்காக ஆபாச வார்த்தைகளால் திட்டிய வீடியோ வைரலாகியுள்ளது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News