கணிப்பில் கோட்டை விட்ட உதயநிதி: ஒரே நாள் ஈரோடு விசிட்டில் முதல்வர் ஸ்டாலின் சொன்ன சீக்ரெட்? உதயநிதி கலகல!
By : Kathir Webdesk
ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து திமுக கூட்டணி வெற்றியின் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகிறது.
கோவை சென்ற விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2026 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தலுக்கான பரப்புரையைத் தொடங்கி விட்டதாக பேசியுள்ளார்.
கோவையில் திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் தமிழக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழிகள் வழங்கப்பட்டது.
விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், கோவை இப்போது திமுகவின் கோட்டையாக மாறிவிட்டதாக கூறினார்.
திமுக சார்பில் சின்னியம்பாளையத்தில் 81ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார். திருமண நிகழ்ச்சியில் தங்க தாலி, பட்டு புடவை, பட்டு வேஷ்டி, கட்டில், மெத்தை, பிரிட்ஜ், டிவி, 2 குத்துவிளக்கு, ஹாட்பாக்ஸ், மிக்ஸி, கிரைண்டர், சில்வர் குடம், சில்வர் பாத்திரம், தாம்பூழம், பீரோ உள்ளிட்ட ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான 70 விதமான பொருள்கள் புது திருமண ஜோடிகளுக்கு சீர்வரிசையாக வழங்கப்பட்டன.
தொடர்ந்து கொடிசியாவில் நடந்த விழாவில் பங்கேற்று ஈரோடு இடைதேர்தல் பற்றி பேசினார். தன்னுடைய கணிப்பு தவறாகிவிட்டதாகவும், முதல்வர் ஸ்டாலின் துல்லியமாக கணித்ததாகவும் கூறினார்.