Kathir News
Begin typing your search above and press return to search.

யாழ் சிவ பூமி; மதமாற்றி நீ கால் வைக்காதே - கிறிஸ்துவ மதபோதகர் பால் தினகரனை நாடு கடத்திய இலங்கை!

யாழ் சிவ பூமி; மதமாற்றி நீ கால் வைக்காதே - கிறிஸ்துவ மதபோதகர் பால் தினகரனை நாடு கடத்திய இலங்கை!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  25 March 2023 5:59 AM IST

இலங்கைக்கு வர்த்தக விசாவில் வருகை தந்த கிறிஸ்துவ் மத போதகர் பால் தினகரன் மதக் கூட்டம் நடாத்த தடை விதிக்கப்பட்டது.

பால் தினகரன் யாழ்ப்பாணத்தில் வியாழன் முதல் மூன்று தினங்கள் மதக் கூட்டம் நடாத்தவுள்ளதாக துண்டுப் பிரசுரங்கள் வெளியிடப்பட்டபோது யாழ்ப்பாணம் சிவசேனை அமைப்பின் சார்பில் இதற்கு எதிராக முறையீடு செய்யப்பட்டது.

வர்த்தக விசாவில் வருகை தரும் ஒருவர் மதப் பரப்புரையில் ஈடுபட முனைவதனால் இதனை தடுக்க வேண்டும் என அந்த முறையீட்டில் கோரப்பட்டது.

இந்த நிலையில் கொழும்பு மற்றும் கண்டியில் மதம் சார் நிகழ்வில் ஈடுபட்ட பால் தினகரன குழுவினர் வியாழன் மாலை 4 மணிக்கு தனியான விமானம் மூலம் இரத்மலான விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் வந்து இறங்கினார்.

யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் வந்து இறங்கிய பால் தினகரன் குழுவினரை வெளியேற அனுமதிக்க முடியாது என குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டு அதிகாரிகள் தடை விதித்தனர்.

நீண்ட பேச்சுக்களின் பின்னர் வியாழன் இரவு 8 மணியளவில் அந்த குழுவினர் அனைவரின் பாஸ்போர்ட்களை பெற்றுக்கொண்டு யாழ் நகரில் உள்ள பிரபல நட்சத்திர கோட்டலில் தங்க அனுமதித்ததோடு மதநிகழ்வுக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளனர்.

பின்னர் அங்கிருந்து இந்தியாவிற்கே திருப்பி அனுப்பப்பட்டனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News