Kathir News
Begin typing your search above and press return to search.

முடிக்காத சாலைக்கு முடித்ததாக பில் போட சொன்ன திமுக பிரமுகர்!

முடிக்காத சாலைக்கு முடித்ததாக பில் போட சொன்ன திமுக பிரமுகர்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  27 May 2023 8:23 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய எல்லைக்குட்பட்ட ஆத்தூர் ஊராட்சியில் 3.60 லட்சம் மதிப்பில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது.

ஆத்தூர் ஊராட்சியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் திமுக., பிரமுகருமான சுப்ரமணியன் சாலை அமைக்கும் பணியை செய்தார்.

ஆனால் சாலை அமைக்கும் பணி முழுமையடையாமல் முழுமை அடைந்த மாதிரி வேலைக்கான பில் போட்டு தர ஒன்றிய பொறியாளர் ராஜசேகரை கேட்டுள்ளார்.

இதற்கு பொறியாளர் மறுத்ததினால் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பொறியாளர் ராஜசேகரை ஆபாசமாக திட்டி அடிக்க பாய்ந்த தி.மு.க., பிரமுகர் சுப்ரமணியன் செயலால் ஒன்றிய அதிகாரிகள் கலக்கமடைந்தனர்.

இச்சம்பவம் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News