Kathir News
Begin typing your search above and press return to search.

திமுக முயற்சி இன்னும் கொஞ்ச நாள் தான் - எஸ்.ஜி.சூர்யா கைதுக்கு கொந்தளிக்கும் அண்ணாமலை!

திமுக முயற்சி இன்னும் கொஞ்ச நாள் தான் - எஸ்.ஜி.சூர்யா கைதுக்கு கொந்தளிக்கும் அண்ணாமலை!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 Jun 2023 10:28 AM IST

தமிழக பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி சூர்யா கைதுக்கு மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “தமிழக பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி சூர்யா இரவோடு இரவாக கைது செய்யப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கதக்கது. சமூகப் பிரச்சினைகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியின் இரட்டை வேட நிலைப்பாட்டினை விமர்சித்ததற்காகக் கைது செய்திருக்கிறார்கள்.

விமர்சனங்களை கருத்தால் எதிர்கொள்ளத் திறனற்ற திமுக, எதிர்க்கருத்துக்கள் கூறுபவர்களைக் கைது செய்து, அவர்கள் குரலை முடக்கப் பார்க்கிறது. அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பவர்களை எல்லாம் கைது செய்யும் ஜனநாயக விரோதப் போக்கு தமிழகத்தில் நிலவுகிறது.

கருத்துச் சுதந்திரத்தின் காவலர்கள் போல் தங்களைக் காட்டிக் கொண்டு, எதிர்க் குரல்களை எல்லாம் நசுக்க நினைக்கும் முயற்சி நீண்ட நாளைக்குச் செல்லாது என்பதை திமுக அரசு நினைவில் கொள்ள வேண்டும்.

விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் இது போல தொடர்ந்து பாஜக தொண்டர்களைக் கைது செய்வது எதேச்சதிகாரப் போக்கு. பாஜக தொண்டர்களை, இது போன்ற அடக்குமுறைகளால் முடக்கி விட முடியாது. எங்கள் குரல், மக்களுக்காக எப்போதும் துணிச்சலாக ஒலித்துக்கொண்டிருக்கும்” என அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News