Kathir News
Begin typing your search above and press return to search.

காங்கிரஸுக்கு விரைவில் பதிலடி கொடுக்கும் பா.ஜ.க.. மக்கள் யார் பக்கம்?

காங்கிரஸுக்கு விரைவில் பதிலடி கொடுக்கும் பா.ஜ.க.. மக்கள் யார் பக்கம்?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  2 July 2023 9:43 AM GMT

பாஜகவிற்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று கூடி கூட்டத்தை நடத்தினாலும் பாஜகவை எதிர்க்கும் அளவிற்கு அவர்களிடம் பலமும் இல்லை, மக்களுடைய ஆதரவு இல்லை என்பது தற்போது தெள்ளத் தெளிவாக இருக்கிறது. ஜூன் 23, 2023 அன்று பாட்னாவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட எதிர்கட்சிகளின் ஒற்றுமைக் கூட்டம் ஒரு கசப்பான உண்மையாக மாறியது மற்றும் பல கட்சிகளின் தலைவர்கள் ஒன்று கூடி அவர்கள் வெறும் புகைப்படத்தை எடுத்துக் கொண்டார்கள் தவிர வேறொன்றுமில்லை. எதிர்பார்த்தது போலவே அரவிந்த் கெஜ்ரிவால் ராஜ்யசபாவில் சேவைகள் குறித்து அவசரச் சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சியிடமிருந்து உத்தரவாதத்தைப் பெறுவதற்கான தனது கருத்தை பதிவு செய்தார்.


மேலும் வழக்கம் போல் ராகுலை விரைவில் திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி கூட்டத்தில் நகைச்சுவையை கொண்டு வர முயல்கிறார்கள். அடுத்த கூட்டம் ஜூலையில் சிம்லாவில் நடைபெறும் என்பதுதான் கூட்டத்தில் வந்த ஒரே முடிவு. அது தற்போது பெங்களூருக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் மற்றும் உலகளாவிய வல்லரசாக மாற்றும் தொலைநோக்கு பார்வை கொண்ட ஒரு மனிதர்க்கு(பிரதமர் நரேந்திர மோடி) எதிராக அவர்கள் ஒன்றுபடுவது அவர்களின் சொந்த பிழைப்பு மற்றும் அவர்களின் வம்சத்தின் வளர்ச்சிக்காகத்தான். ஏற்கனவே குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பிரதமர் மோடி பேசியது இவர்கள் மத்தியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


டெல்லியில் எந்த ஒரு அரசும் நிலையாக இருக்க வேண்டுமென்றால், இரண்டு தேசியக் கட்சிகளில் ஒன்று லோக்சபாவில் குறைந்தபட்சம் 140 இடங்களைப் பெற்றிருக்க வேண்டும் என்ற உண்மையையும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். கடந்த 2 பொதுத் தேர்தல்களில் மோடியின் தலைமையில் பாஜக தனித்து 272 என்ற எண்ணைத் தாண்டியிருந்தாலும், மிகவும் பழமையான கட்சி என்று கூறும் காங்கிரஸ் கட்சியால் இரண்டு தேர்தல்களிலும் 10% இடங்களைக் கூட தாண்ட முடியவில்லை. 2019ல் 137 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 8 இடங்களை மட்டுமே வென்றது. 2019ல் பாஜக 132 இடங்களில் மட்டுமே போட்டியிட்டது. இதில் இருக்கும் மிகப்பெரிய உண்மை என்னவென்றால் வரும் 2024 ஆம் தேர்தலிலும் மக்கள் கொடுக்கும் நம்பிக்கை மூலமாக பாஜக நிச்சயம் வெற்றி பெறும். இந்த வெற்றியின் மூலமாக நிச்சயம் காங்கிரசுக்கு பாஜக பதிலடி கொடுக்கும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News