கார்ப்பரேட் சந்தைக்கான முக்கிய தளம்... தொடங்கி வைத்த மத்திய நிதியமைச்சர்...
By : Bharathi Latha
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று, ஏ.எம்.சி ரெப்போ கிளியரிங் லிமிடெட் (ஏஆர்சிஎல்) மற்றும் கார்ப்பரேட் பத்திரங்களுக்கான கார்ப்பரேட் டெப்ட் மார்க்கெட் டெவலப்மென்ட் ஃபண்ட் (சிடிஎம்டிஎஃப்) ஆகியவற்றைத் தொடங்கி வைத்தார். முன்னதாக, நிதிச் சந்தைக் கட்டுப்பாட்டாளரான செபி நிறுவனக் கடன் சந்தை மேம்பாட்டு நிதிக்கான (சிடிஎம்டிஎஃப்) விரிவான கட்டமைப்பையும் அறிமுகப்படுத்தியது.
இந்திய பத்திர கார்ப்பரேட் சந்தைக்கு இந்த தளம் மிகவும் முக்கியமானது ஆகும். இந்நிகழ்ச்சியின் போது பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,”நாட்டின் மூலதனச் சந்தையானது பல வகையான வர்த்தகங்களுக்கு ஒரு ட்ரெண்ட் செட்டராக உருவெடுத்துள்ளது. 2013 ஆம் ஆண்டில் 2 கோடியாக இருந்த நாட்டில் உள்ள சில்லறை டீமேட் கணக்குகளின் எண்ணிக்கை, இந்த ஆண்டு 11.4 கோடியாக அதிகரித்துள்ளது. இது பங்குச் சந்தையைப் பொறுத்தவரையில் பெரிய அளவில் உள்ளது” என்றார்.
அரசாங்கம், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து ஒரு சாதகமான சூழலை உருவாக்க வேண்டும். நாட்டில் இந்த திசையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று பேசினார் மத்திய நிதியமைச்சர் பேசினார்.
Input & Image courtesy: News