Kathir News
Begin typing your search above and press return to search.

உலகளாவிய சிக்கல்களைத் தீர்ப்பதில் இந்தியா முன்னிலை.. மோடி அரசு எடுத்துக் கொண்ட உறுதிமொழி..

உலகளாவிய சிக்கல்களைத் தீர்ப்பதில் இந்தியா முன்னிலை.. மோடி அரசு எடுத்துக் கொண்ட உறுதிமொழி..
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  10 Aug 2023 4:53 AM GMT

பிரதமர் நரேந்திர மோடி உலகளாவிய பருவநிலை இயக்கத்தை வழிநடத்துவதாகவும் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவின் வழிநடத்தலை ஏற்க உலகம் தயாராக உள்ளது எனவும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். புதுதில்லியில், தொழில் வர்த்தக சங்க பிரதிநிதிகளுடன் இன்று கலந்துரையாடிய அவர், பி.ஹெச்.டி சேம்பர் என்ற இந்த தொழில் வர்த்தக கூட்டமைப்பின் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்தார். பசுமை ஹைட்ரஜன் மையத்தை இந்த கூட்டமைப்பு அமைத்துள்ளதற்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார்.


பசுமை எரிசக்தி மாற்றத்தில் கவனம் செலுத்தும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறைக்கு உதவ மத்திய அரசு விரும்புகிறது என்று அவர் கூறினார். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்தியா உலகின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விரிவாக்கத் திட்டத்தை செயல்படுத்தி வருவதாக டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். 2030 ஆம் ஆண்டிற்குள் புதைபடிவமற்ற எரிபொருள் வளங்களிலிருந்து 500 ஜிகாவாட் நிறுவப்பட்ட மின் திறனை அடைய இந்தியா உறுதிபூண்டுள்ளது என்று அவர் கூறினார்.


பருவநிலை மாற்றத்திற்கு எதிரான இந்தியா சிறந்த அறப்போரை கடந்த ஒன்பது ஆண்டுகளில் நிகழ்த்தியுள்ளதாக அவர் கூறினார். 2030 பாரிஸ் ஒப்பந்த இலக்கை விட அதிகமாக, புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து 40 சதவீத எரிசக்தி உற்பத்தி செய்வது இந்தியா இலக்கை மிஞ்சியுள்ளதாக ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News