புதிய நான்கு வழி சாலை திறப்பு.. நெடுஞ்சாலை போக்குவரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் மத்திய அரசு..
By : Bharathi Latha
மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள மல்காபூரில் ரூ.800 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலை 53-இல் 45 கி.மீ நீளம் கொண்ட நந்துரா முதல் சிக்லி வரையிலான நான்கு வழிச்சாலையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஸ்ரீ நிதின் கட்கரி நேற்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தேசிய நெடுஞ்சாலை 53 இல் 45 கிமீ நீளமுள்ள நான்கு வழிச்சாலைத் திட்டம் புல்தானா மக்களின் முன்னேற்றத்தையும் செழிப்பையும் அதிகரிக்கும்.
மத்திய அரசின் முக்கியமான திட்டங்களில் ஒன்றான பாரத்மாலா யோஜனா திட்டத்தின் கீழ், தேசிய நெடுஞ்சாலை 53 இல் அமராவதி-சிகாலி பிரிவு தொகுப்பு-4 நான்கு வழிச்சாலை கட்டுமானம் நிறைவடைந்துள்ளது. இந்த திட்டத்தில் 6 கிமீ நீளமுள்ள நந்துரா கிரீன்ஃபீல்ட் பைபாஸ், மல்காபூர் ஆர்ஓபி, 4 பெரிய பாலங்கள், 18 சிறு பாலங்கள், 11 கல்வெட்டுகள், 3 வட்ட சுரங்கப்பாதைகள், 4 பாதசாரி சுரங்கப்பாதைகள், 11.53 கிமீ நீளமுள்ள இரட்டை வழிச் சாலை, 20 பேருந்து கொட்டகைகள் மற்றும் 1 டிரக் ஷெட்கள் ஆகியவை அடங்கும்.
இந்த திட்டம் குஜராத், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா ஆகிய நான்கு மாநிலங்களுக்கு இடையே பரஸ்பர வர்த்தகத்தை அதிகரிக்கும். கிழக்கு-மேற்கு வழித்தடத்தில் சிறந்த இணைப்பு கிடைக்கும், இது ராய்ப்பூர், நாக்பூர் மற்றும் சூரத் ஆகிய நகரங்களுக்கு பயனளிக்கும். இது இங்குள்ள மக்களுக்கு மிகுந்த நன்மை பயக்கும் அது மட்டும் கிடையாது பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கம் சாலைகளை நாட்டின் உயிர் நாடி என்று வர்ணித்து பல்வேறு நெடுஞ்சாலைகளை உருவாக்கி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: News