காய்கறிகளோடு உயரும் பருப்பின் விலை.. சோகத்தில் இல்லத்தரசிகள்.. பண வீக்கம் காரணமா..
By : Bharathi Latha
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே தக்காளியின் விலை கடுமையாக அதிகரித்து இருக்கிறது . குறிப்பாக ஒரு கிலோ தக்காளி ரூபாய் 200க்கு மேல் சென்று இருக்கிறது தக்காளி மட்டும் கிடையாது. வெங்காயம் போன்ற அத்தியாவசிய காய்கறிகளின் விலைகளும் உயர்ந்து இருந்தது. இதன் காரணமாக ஏற்கனவே இல்லத்தரசிகள் கடும் அவதியில் இருந்து வந்தார்கள்.
இந்நிலையில் தேசிய அளவில் தக்காளி காய்கறி வகைகள் உயர்ந்துள்ள நிலையில் சில்லறை பணவீக்கம் கடந்த 15 மாதங்களில் இல்லாத வகையில் ஏழு புள்ளி நான்கு சதவீதமாகும் அதிகரித்து இருக்கிறது. முக்கிய உணவுப் பொருளான அரசி கோதுமை விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை கையில் எடுத்து வந்தது. குறிப்பிட்ட அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கோதுமை விலை உயர்வை கட்டுப்படுத்த இந்திய உணவுக் கழகம் மூலம் வெளிச்சந்தையில் 40 டன் கோதுமை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு எடுத்தது.
இதனைத் தொடர்ந்து இதுவரை இல்லாத வகையில் ஆகஸ்ட் மாதம் விதைப்பு காலத்தில் 40 சதவீதம் வரை மழை குறைந்து இருப்பதன் காரணமாக பருப்புகளின் வகைகளின் சாகுபடி பரப்பு கிட்டத்தட்ட 149.5 லட்சம் ஏக்கர் குறைந்து இருக்கிறது. எனவே சாகுபடி குறைந்த காரணத்தினால் பருப்பு வகைகளின் விலை கடந்த ஜூன் மாதத்தில் பத்து சதவீதம் ஜூலை மாதத்தில் 13 சதவீதம் உயர்ந்தது இல்லையில் அரசை சாகுபடி குறைந்து இருக்கிறது. எனவே அடுத்தடுத்த வரும் நாட்களில் இதுவரை இல்லாத வகைகளின் பருப்புகளின் விலை உயர்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்று வணிக வட்டாரத்தினர் கூறுகிறார்கள்.
Input & Image courtesy: News