பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி.. இந்தியர்களுக்கும், இந்தியாவிற்கும் கிடைத்த சிறந்த அங்கீகாரம்..
By : Bharathi Latha
ஆகஸ்ட் மாதத்தில் இறுதியில் நடைபெறும் மனதின் குரல் நிகழ்ச்சியில் நேற்று நடந்தது. மோடி அவர்கள் சிறப்புரையாற்றி இருக்கிறார். இது பற்றி அவர் கூறும் பொழுது, "என்னுடைய அன்பான குடும்பத்தாரே, ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதியன்று பாரதமும், பாரதத்தின் சந்திரயானும், உறுதிப்பாட்டின் சில சூரியன்கள், நிலவிலும் கூட உதிக்கின்றன என்பதை நிரூபித்திருக்கின்றன. மிஷன் சந்திரயான் மூலம் அனைத்து நிலைகளிலும் பாரதம் வெல்ல விரும்புகிறது, வெல்வது எப்படி என்பதைத் தெரிந்து வைத்திருக்கிறது என்பது புதிய பாரதத்தின் உணர்வின் அடையாளமாக ஆகி இருக்கிறது. இந்த மிஷனுடைய ஒரு பக்கம் என்னவென்பது பற்றி நான் விசேஷமாக விவாதிக்க விரும்புகிறேன். இந்த முறை நான் செங்கோட்டையிலே கூறியிருந்தேன், அதாவது பெண்கள் வழிநடத்தும் வளர்ச்சியை தேசிய இயல்பு என்ற வகையில் வலுவுடையதாக்க வேண்டும். பெண்கள் சக்தியின் வல்லமை இணையும் போது, அங்கே சாத்தியமில்லாதவை கூட சாத்தியமாகின்றன.
பாரதத்தின் மிஷன் சந்திரயான், பெண் சக்திக்கான உயிர்ப்புடைய எடுத்துக்காட்டாக இருக்கின்றது. இந்த மொத்த மிஷனிலும் பல பெண் விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் நேரடியாக இணைந்திருக்கிறார்கள். இவர்கள் தனித்தனி அமைப்புக்களின் திட்ட இயக்குநர், திட்ட மேலாளர் என பல முக்கியமான பொறுப்புக்களை நிர்வாகித்துள்ளார்கள். பாரதத்தின் பெண்கள், இப்போது எல்லையில்லாதது என்று புரிந்து கொள்ளப்படும் விண்ணுக்கே சவால் விடுக்கின்றார்கள். எந்த ஒரு நாட்டின் பெண்களும், இத்தனை தீவிர ஆர்வம் உடையோராக இருந்தால், அந்த தேசத்தின் வளர்ச்சியை யாரால் தடை செய்ய முடியும்.
நாம் இத்தனை பெரிய பயணத்தை ஏன்? மேற்கொள்ள முடிந்தது என்றால், நமது கனவு உரியது, நமது முயற்சியும் பெரியது. சந்திரயான் மூன்றின் வெற்றியில் நமது விஞ்ஞானிகளோடு கூடவே, பிற துறைகளின் முக்கிய பங்களிப்பும் பெரிய அளவில் இருக்கிறது. அனைத்து பாகங்கள் மற்றும் தொழில்நுட்பத் தேவைகளை நிறைவு செய்ய, நாட்டுமக்கள் பங்களிப்பு அளித்திருக்கிறார்கள். அனைவரின் முயற்சிகளும் இருக்கும் போது, வெற்றியும் கிடைத்திருக்கிறது. இந்த சந்திரயான் 3இன் மிகப்பெரிய வெற்றியே இது தான். இனிவருங் காலத்திலும் கூட, நமது விண்வெளித் துறை, அனைவரின் முயற்சியின் வாயிலாக, இப்படி கணக்கற்ற வெற்றிகளை ஈட்ட வேண்டும் என்று நான் விழைகிறேன்" என்று பிரதமர் மோடி கூறினார்.
Input & Image courtesy: News