Kathir News
Begin typing your search above and press return to search.

ஜிகாத் செய்து தலையை துண்டிக்க கற்றுத் தரும் பாகிஸ்தான் ஆசிரியர்!

ஜிகாத் செய்து தலையை துண்டிக்க கற்றுத் தரும் பாகிஸ்தான் ஆசிரியர்!

JananiBy : Janani

  |  3 March 2021 8:35 AM GMT

தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ ஒன்றில், பாகிஸ்தானில் மாணவர்களுக்கு ஜிகாத்தை மேற்கொள்ளுமாறும், இஸ்லாமியர்கள் மற்றும் முகமது நபி குறித்துப் பேசத் துணிபவர்கள் எவராயினும் அவர்களையும் கொல்லுமாறும் ஆசிரியர் ஒருவர் அறிவுறுத்துவதைக் காணமுடிந்தது. மேலும் இந்த வீடியோவானது மேஜர் கவுரவ் ஆர்யாவால் டிவிட்டரில் பகிரப்பட்டுள்ளது.


அந்த வீடியோவில் ஆசிரியர் குரானை மேற்கோள் காட்டி, "முகமது நபி குறித்துப் பேசத் துணிபவர்கள் யாராயினும் அவர்களை வெட்டுவது உங்களின் கடமையாகும். முகமது நபியை இழிவுபடுத்துபவர்களுக்குத் தண்டனை அவர்களின் தலையை உடம்பிலிருந்து துண்டிப்பதே," என்று கூறினார்.

"அரசாங்கம் குழந்தைகளை விளையாட்டுப் போட்டிகளை ஈடுபட அறிவுறுத்துகிறது. அது தேவையில்லாதது. அதே வேளையில், பிற முஸ்லீம்களுக்கு உதவ அல்லது காஷ்மீரில் ஊடுருவது குறித்து அவர்களுக்குத் தெரியாது. இதைக் குழந்தைகளுக்குக் கற்றுத்தரக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் இதை அனைத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும். முகமது நபி குறித்து தவறாகப் பேசுபவர்களின் தலையை நீங்கள் துண்டிக்க வேண்டும், ஜிகாத்தை கடைப்பிடிப்பது குறித்தும் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்," அந்த ஆசிரியர் அறிவுறுத்தினார்.

மேலும் வகுப்பில் இருக்கும் மாணவர்கள் ஒற்றுமையை முஸ்லீம்கள் முழக்கங்களை எழுப்புவதைக் காண முடிந்தது. இந்த வீடியோ வெளியிட்ட சரியான நேரம் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும், மாணவர்கள் மாஸ்க் அணிந்திருப்பதன் மூலம் இது கொரோனா தொற்றுநோய் காலகட்டத்திற்குப் பிறகு எடுக்கப்பட்டுள்ளது என்பது தெரிகின்றது.

பாகிஸ்தான் பள்ளிகளில் தீவிர மயமாக்கல் குறித்துப் பேசிக் கொண்டிருக்கும் வேளையில், அந்த ஆசிரியர் பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பள்ளி பாடத்திட்டத்தில் ஜிகாத் மற்றும் தலை துண்டிப்பது குறித்து இருக்கும். ஆனால் இந்த குழந்தைகளுக்கு நாங்கள் கற்றுத்தர வேண்டியிருக்கின்றது என்றும் கூறினார்.




மேலும் கடந்த ஆண்டு செப்டம்பரில் பிரான்சில் சார்லி ஹெபிடோ, முகமது நபியின் கேலிச்சிரத்தை அச்சிட்டபோது, அதனை எதிர்த்து பல்லாயிரக்கணக்கான முஸ்லீம்கள் போராட்டத்தில் இறங்கினர். மேலும் அவர்கள் பிரான்ஸ்க்கு மரண அழைப்பு விடுத்தும் மற்றும் அவர்களின் தயாரிப்புகளைப் புறக்கணித்து போராட்டங்களை நடத்தினர். இதற்குத் தண்டனை அவர்களின் தலையைத் துண்டிப்பது என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் எச்சரித்தனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News