தி.மு.க நோட்டீஸ் வாங்க மறுத்த பெண்கள் மீது கொத்தடிமைகள் கொடூர தாக்குதல்! கரூர் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் பதற்றம்!
By : Muruganandham
திமுக கட்சி தலைமை தான் பெண்களை இழிவாக பேசுகிறது என்றால், கட்சி தொண்டர்கள் அதைவிட கீழ் தரமாக இறங்கி பெண்கள் மீது தாக்குதலில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர்.
கரூர் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பா.ஜனதாவுக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். திமுக சார்பில் மொஞ்சனூர் ஆர். இளங்கோ, மக்கள் நீதி மய்யம் முகமது அனீப் சாகில், தமிழர் கட்சி சார்பில் அனிஷா பர்வீன், அமமுக சார்பில் பி.எஸ்.என். தங்கேல் ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இரண்டிலுமே அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியிலுள்ள பகுதிகள் பின்தங்கியே உள்ளன. தற்போது வரை இந்த தொகுதியை தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தொடர்ந்து கைப்பற்றி வருகிறது. தி.மு.க. 5 முறை, அ.தி.மு.க. 5 முறை, காங் கிரஸ் 3 முறையும், சுயேட்சை ஒரு முறையும், சுதந்திர கட்சி ஒரு முறையும், முஸ்லிம் லீக் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.
தற்போது பாஜக-திமுக இடையே பலத்த போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் திமுகவினர் அராஜக செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக நோட்டீஸை வாங்க மறுத்த பெண்களை திமுகவினர் கொடூர தாக்குதலில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆட்சி அதிகாரம் கையில் இல்லாமலே இந்த அளவுக்கு அராஜகம் என்றால், இவர்கள் கையில் அதிகாரம் போனால் மக்களின் நிலையை சிந்தித்து பாருங்கள்.