ஊருக்கு உபதேசம் செய்வதாக நினைத்து உதயநிதியால் அவமானப்பட்ட துர்கா ஸ்டாலின்!
By : Muruganandham
மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருடன் வந்து வரிசையில் காத்திருந்து ஓட்டுப் போட்டார் திமுக தலைவர் ஸ்டாலின்.
கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார் திமுக தலைவர் ஸ்டாலினும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலினும் போட்டியிட்டனர். இருப்பினும் மயிலாப்பூர் தொகுதியில்தான் ஸ்டாலின் மற்றும் குடும்பத்தாருக்கு ஓட்டு இருக்கிறது.
தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி கல்லூரி வாக்குச் சாவடிக்கு ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் , அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டனர்.
அப்போது அங்கு கூடியிருந்தவர்களை பார்த்து, ஒருவரும் மாஸ்க் அணியவில்லையா? என துர்க்கா ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அந்த நேரம் பார்த்து பின்னால் வந்த உதயநிதியும் மாஸ்க் அணியவில்லை.
இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்த நெட்டிசன்கள் முதலில் உங்க மகனை பாருங்க. பிறகு ஊருக்கு உபதேசம் செய்யலாம் என கருத்து தெரிவித்துள்ளனர்.