Kathir News
Begin typing your search above and press return to search.

அரசு பள்ளிகள்.. பீகார் முதலிடம், தமிழகம் 10-வது இடம்? வெளியான ஷாக் ரிப்போர்ட்!

அரசு பள்ளிகள்.. பீகார் முதலிடம், தமிழகம் 10-வது இடம்? வெளியான ஷாக் ரிப்போர்ட்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  10 Aug 2025 11:18 PM IST

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் தமிழகத்திற்கு 10-வது இடம் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறி இருக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது, அதில் தேசிய அளவில் தமிழகம் 10-வது இடம் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மொத்தம் 14 லட்சத்து 72 ஆயிரம் பள்ளிகள் இருக்கின்றன. அதில் 10 லட்சத்து 21 ஆயிரம் பள்ளிகள் அதாவது 69.14 சதவீதம் அரசு பள்ளிகள் ஆகும். அதேபோல மொத்தமுள்ள 24 கோடியே 80 லட்சம் பள்ளி மாணவர்களில் 12 கோடியே 75 லட்சம் பேர் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. அதாவது 51.4 சதவீத மாணவர்கள் அரசு பள்ளிகளில் படிக்கின்றனர். ஆனால் இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு, ஆண்டு குறைந்து வருகிறது. இது தொடர்பான தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.


அதன்படி கடந்த 2021-22-ம் ஆண்டின் நிலவரப்படி, நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 14.32 கோடி யாக இருந்தது. ஆனால் இது தற்போது 1 கோடியே 54 லட்சம் குறைந்து போய் 12 கோடியே 78 லட்சம் ஆக இருக்கிறது. மாநில வாரியாக அரசு பள்ளி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையில் பீகார் முதலிடத்தில் இருக்கிறது. அந்த மாநிலத்தில் ஒரு கோடியே 74 லட்சத்து 66 ஆயிரத்து 574 பேர் படிக்கின்றனர். 2-வது இடத்தில் உத்தர பிரதேசம் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்கள் உள்ளன. இந்த மாநிலங்களில் தலா 1.58 கோடி மாணவர்கள் அரசு பள்ளிகளில் படிக்கின்றனர். 10-வது இடத்தில் தமிழகம் உள்ளது. இங்கு 48 லட்சத்து 40 ஆயிரத்து 34 மாணவர்கள் அரசு பள்ளிகளில் படிக்கின்றனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் அரசு பள்ளிகளின் நிலைமை மோசமாகி வருகிறது குறிப்பாக அரசு பள்ளி கட்டிடங்களில் தங்களுடைய பிள்ளைகளை சேர்ப்பதற்கு பெற்றோர் தயக்கம் காட்டி வருகிறார்கள். போதுமான வசதி வாய்ப்புகளையும், தரமான கட்டிடங்களையும் ஏற்படுத்திக் கொடுத்தால் வருங்காலத்தில் தமிழகத்திலும் அரசு பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாகும் என்று கருத்து கூறப்பட்டு இருக்கிறது

Next Story
கதிர் தொகுப்பு
Trending News