Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழ்ப் புத்தாண்டு எந்த மாதத்தில் கொண்டாடப்படுகிறது? பின்னிருக்கும் தகவல்கள் !

புத்தாண்டு கொண்டாட்டத்தில் பல்வேறு சந்தேகங்களை நிலவுவதற்கும், அதற்கான பின்னணி என்னவாக இருக்கும்.

தமிழ்ப் புத்தாண்டு  எந்த   மாதத்தில் கொண்டாடப்படுகிறது? பின்னிருக்கும் தகவல்கள் !
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 Dec 2021 3:11 PM GMT

உலகில் வாழும் ஒவ்வொரு மக்களும் புத்தாண்டை கொண்டாட விரும்புகிறார்கள். ஒவ்வொரு மதத்தினரும் தங்கள் மதத்தின் கொள்கையின் படி புத்தாண்டை கொண்டாடுகிறார்கள். குறிப்பாக தமிழர்கள் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடுகிறார்கள். சில மதங்களில் கிறிஸ்மஸ்த்திற்கு அடுத்து வரும் ஜனவரி முதல் நாளே புத்தாண்டு ஆக கொண்டாடுகிறார்கள். குறிப்பாக பல்வேறு மக்கள் தை மாதம், சித்திரை மாதத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு இவற்றில் எந்த மாதத்தில் புத்தாண்டு கொண்டாடுவது? என்பதை கேள்வி குறியாக்கி உள்ளார்கள். அதற்கு மத, ஆன்மிக, கலாச்சார, மொழி சாயம் பூசுவோர் இருதரப்பிலும் உள்ளார்கள். இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், நாட்குறிப்பு என்பது இது எதிலும் சம்பந்தப்பட்டதல்ல.


உலகின் ஒவ்வொரு பகுதியிலும் பின்பற்றப்படும் நாட்காட்டிகள் ஏதாவது ஒரு அறிவியல் முறையின் அடிப்படையாகவே அமைந்தது. இந்திய நாட்குறிப்பு முறையும் இதற்கு விதிவிலக்கல்ல. அது ஒரு சமயம் சார்ந்தோ அல்லது ஒரு மொழி சார்ந்தோ அமைக்கப்பட்டதல்ல. அதன் பின்னால் இருக்கும் கணக்கீடுகளும் குறிப்புகளும் முழுக்க முழுக்க அறிவியல் சார்ந்தவை. பல்வேறு மதங்களில் வாழ்ந்த மக்கள் தங்களுடைய இயற்கையின் கடவுள்களை மூலம் தான் மாதங்கள் கணக்கிட்டு அதன் மூலம் புத்தாண்டு கணிக்கப்பட்டு கொண்டாடினார். உதாரணமாக தமிழர்கள் பயன்படுத்தும் நாட்காட்டி முறையின் மாதத் துவக்கமாக கணக்கிடப்படும் முறை இந்தியாவில் எந்தப் பகுதியிலும் பயன்படுத்துவதில்லை. சூரியன் முதற்கடவுளாக வழங்கப்படுவதால், அதை வைத்து நாற்காட்டி அவர்கள் கணித்தார்கள்.


இந்தியாவில் நாட்குறிப்பு முறை 'சூர்ய சித்தாந்தம்' என்ற வானவியல் நூலின் அடிப்படையிலேயே பெரும்பாலும் அமைந்திருக்கிறது என்ற போதிலும், மற்ற சில நூல்களையும் பின்பற்றுவோர் உண்டு. சூரியனின் நகர்வைப் பின்பற்றி அமைந்த சூரிய நாட்குறிப்பு முறை, சந்திரனின் நகர்வைப் பின்பற்றி அமைந்த சந்திர நாட்குறிப்பு முறை கணிக்கப்பட்டது. ஏன் இவ்வாறு சூரிய, சந்திர நகர்வைப் பின்பற்றி நாட்குறிப்பு முறை ஏற்படுத்தப்படவேண்டும் என்ற கேள்வி சிலருக்கு எழலாம். எந்த வித வசதிகளும் இல்லாமல் நம் முன்னோர்களுக்கு நாட்கள கணிக்க தெரிந்த ஒரே வழி வானில் தெரியும் இரு பெரும் கோள்களான சந்திரனையும் சூரியனையும் பார்த்துக் கணிப்பதுதான். சூர்ய, சந்திரனின் சுற்றுப்பாதையில் இருந்த 27 விண்மீன் கூட்டங்களை வகைப்படுத்தி 12 ராசிகளை உருவாகினர் அக்கால வானவியலாளர்கள். அந்தப் பாதியில் தான் மேஷம் முதல் மீனம் வரையான ராசிகளை அமைத்தனர்.


கிட்டத்தட்ட உலகின் எல்லாப் பகுதியிலும் ராசிகள் அதே மிருக வடிவில் வகைப் படுத்தப்பட்டு அவற்றிற்குரிய பெயர்களால் அழைக்கப்பட்டன. அந்த நீள்வட்டப் பாதையைக் கடக்க சூரியன் எடுத்துக்கொள்ளும் நாட்கள், பூமி சூரியனைச் சுற்றிவருகின்ற 365 நாட்கள். ஒவ்வொரு ராசியையும் கடக்க 30 -31 நாட்களை சூரியன் எடுத்துக்கொள்ளும் என்றும் கணித்தார்கள். இந்திய முறையில் ஒரு நாள் என்பது அன்றைய சூரிய உதயத்திலிருந்து அடுத்த நாள் சூரிய உதயம் வரை உள்ள 24 மணி நேரம் ஆகும். தமிழர் முறை மூலம், சூரியன் அந்த நாளின் சூரிய அஸ்தமானதிற்குள் இடம் பெயர்ந்தால் அன்றே அந்த மாதம் பிறப்பதாகக் கொள்ளப்படுகிறது. இல்லையேல் அடுத்தநாள் தான் மாதத்தின் முதல் தேதி. கல்வெட்டுகளை எடுத்துக் கொண்டால், தமிழர்களுடைய ஆரம்ப காலக் கல்வெட்டுகளில் சக வருடத்தையும் கலி வருடத்தையும் குறிப்பிடும் கல்வெட்டுகளைக் காணலாம். ஆனால், மாதங்களைக் குறிக்கும் போது அந்த மாதத்திற்கு உரிய ராசிப் பெயர்களையே மேட ஞாயிறு, இடப ஞாயிறு குறிப்பிட்டிருக்கின்றனர். இதிலிருந்து ராசிகளை வைத்தே ஆண்டுக்கணக்கு இருந்ததைத் தெரிந்து கொள்ள முடிகிறது. அதற்குப் பின்னால் வந்த கல்வெட்டுகளில் பெரும்பாலும் இந்தப் பெயர்களே குறிப்பிடப்பட்டு வந்திருக்கின்றன. இப்படி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழர்கள் சூரியனை வைத்து தான் மாதத்தின் முதல் நாளை கண்டறிவார்கள். அப்படி மேஷத்தில் குறிப்பிடுகையில் சித்திரை முதல் நாள்தான் அவர்கள் முறைப்படி புத்தாண்டாக பார்க்கப்படுகிறது.

Credit to author: Krishnan

Input & Image courtesy: Krishnan

Image : Astroved


Next Story
கதிர் தொகுப்பு
Trending News