கத்தோலிக்க போர்வையின் கீழ் பாலியல் துஷ்பிரயோகம்: வெளியான அறிக்கை முடிவு!
பிரெஞ்சு கத்தோலிக்க மத குருமார்களால் 2 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளாக்கி உள்ளார்கள்.
By : Bharathi Latha
உலகமெங்கும் பல்வேறு குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி வருகிறார்கள். குறிப்பாக அவர்கள் தங்களுடைய சுற்றுச் சூழல் காரணமாக அல்லது அவர்களை அதிகமாக இருக்கும் இடங்களிலும் இந்த மாதிரியான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் தற்போது பிரெஞ்சு நாட்டின் ஒரு சர்வே குழுவின் முடிவு அதிர்ச்சியான ரிப்போர்ட்டை கொடுத்துள்ளது. அதாவது குறிப்பாக பிரெஞ்சு கத்தோலிக்க மதகுருக்கள் 2,00,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக அறிக்கை தனது முடிவை வெளியிட்டுள்ளது. பாரிஸ்(CNN) பிரான்சில் உள்ள கத்தோலிக்க மதகுருமார்களின் உறுப்பினர்கள் கடந்த ஏழு தலைமுறைகளாக கிட்டத்தட்ட 2,16,000 சிறார்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை தனது முடிவை தருகிறது.
அதிலும் பாதிக்கப்பட்டவர்களின் நலனில் அக்கறை கொள்ளாமல் தேவாலயங்கள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் தரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சர்வேயின் முடிவில் கூறப்பட்டுள்ளது. கத்தோலிக்க பள்ளிகள் மற்றும் இளைஞர் திட்டங்கள் போன்ற தேவாலயத்திற்கு தொடர்புடைய பல நடவடிக்கைகளில் கீழ் இது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. 1950 மற்றும் 2020க்கு இடையில் பிரெஞ்சு கத்தோலிக்க தேவாலயத்தின் பெயரில் துஷ்பிரயோகம் செய்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,15,000 மதிப்பிடப்பட்டுள்ளது.
அரசு நடத்தும் பள்ளிகளைக் காட்டிலும், தேவாலய அமைப்புகளுக்குள் பல்வேறு குழந்தைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று அறிக்கை கூறுகிறது. இது மாதிரியான குற்றங்களை விசாரிக்கும் அமைப்பு தனது அறிக்கையைத் தயாரிக்க பல்வேறு மதப் பின்னணியைச் சேர்ந்த 21 உறுப்பினர்களைக் கொண்ட பலதரப்பட்ட நிபுணர் குழுவின் தலைவராக தேர்ந்தெடுத்து பல்வேறு கட்ட ஆதார சாட்சிக்கு பின்னர்தான் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்றும் தெளிவாகக் கூறுகிறது. இது கிட்டத்தட்ட 6,500 பேரிடமிருந்து நேரடி சாட்சியங்களை சேகரித்தது. இது 2,700 துஷ்பிரயோகம் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண வழிவகுத்தது.
Input & Image courtesy:Wionews