"புருஷன் செத்தா என்ன..? நீ இருக்கல".. கணவனின் ₹80,000 கடனுக்கு மனைவியிடம் அத்துமீறிய தி.மு.க நிர்வாகி!
By : Muruganandham
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே கணவன் வாங்கிய கடனுக்காக, திமுக நகரச் செயலாளர் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் தெரிவித்துள்ளார். நியூஸ் ஜெ ஊடகத்திற்கு அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டி, வீடியோ வடிவில் வெளியிடப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே, குருக்களையன்பட்டி என்ற கிராமத்தை சேர்த்தவர் சக்திவேல். இவர் அவசர தேவைக்காக, அதே பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகி பழனிச்சாமி என்பவரிடம், ₹80,000 கடன் பெற்றுள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன், கடனை முழுமையாக கட்டி முடிக்கும் முன்னரே சக்திவேல் இறந்துவிட்டார். கணவன் இறந்த துக்கம் தணிவதற்கு முன்னதாகவே, அவரது மனைவி காளீஸ்வரியிடம் கடன் தொகையைக் கேட்டு பழனிச்சாமி தொந்தரவு செய்துள்ளார்.
அடிக்கடி நேரிலும், போனிலும் ஆபாசமாக திட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். கணவன் வாங்கிய கடனுக்காக பொறுமை காத்து வந்த அவர், ஒரு கட்டத்தில் வெளியில் சொல்ல முடியாத கொடுமையை அனுபவிக்க ஆரம்பித்தார்.
உடனடியாக தமக்கு பாலியல் தொல்லை அளித்தாக காளீஸ்வரி புகார் தெரிவித்துள்ளார். கடனை விட இரண்டு மடங்கு பணம் கட்டியும் இன்னும் பணம் தரவேண்டும் என்று கூறி மோசமான நடவடிக்கைகளில் திமுக நிர்வாகி ஈடுபடுவதாக, நியூஸ் ஜெ ஊடகத்திற்கு அவர் கண்ணீருடன் வேதனை தெரிவித்துள்ளார். அந்த வீடியோவை அடுத்து பார்க்கலாம்.