அட ஜாலி.. இனி இந்தியாவிலும் E-Rupeeஐ நீங்கள் பயன்படுத்தலாமா.. புது அப்டேட்..
By : Bharathi Latha
இந்தியாவின் இ-ரூபி (eRupee) விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஏற்கனவே கிரிப்டோ கரன்சிக்கு பதிலாக டிஜிட்டல் ரூபாய்களை மத்திய அரசு குறிப்பாக ஆர்பிஐ வெளியிடும் என்று கூறப்பட்டுள்ளது. அவற்றை விரைவில் நடைமுறைப் படுத்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தகவல்கள் தற்போது வழியாக இருக்கிறது. இந்தியாவின் eRupee என்பது, டிஜிட்டல் ரூபாய் அல்லது டிஜிட்டல், அல்லது E-கரன்ஸி ரூபாய் என்று அழைக்கப்படுகிறது. சுலபமாக புரிய வைக்க வேண்டும் என்றால் எப்படி இ- பாங்கிங் என்ற முறையை நாம் பயன்படுத்துகிறோம். பேங்க் சேவைகளை இணையதளம் வழியாக பெறுகிறோம் அல்லவா? அதைப்போல இந்த டிஜிட்டல் ரூபாய்களையும் நாம் பயன்படுத்தலாம்.
இது இந்திய ரூபாயின் டோக்கனைஸ் செய்யப்பட்ட டிஜிட்டல் பதிப்பாகும். இது இந்திய ரிசர்வ் வங்கியால், மத்திய வங்கி டிஜிட்டல் நாணயமாக வெளியிடப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. டிஜிட்டல் ரூபாய் அல்லது டிஜிட்டல் நாணயம் என்பது காகிதப் பணத்தின் டிஜிட்டல் வடிவமாகும். இ-ரூபாய் மற்றும் ரொக்கப் பணத்தின் மதிப்பு இரண்டுமே சமமானது. உதாரணமாக, 1 டிஜிட்டல் ரூபாய் என்பது 1 ரூபாய் பணத்திற்கு சமம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பொருள், கிரிப்டோகரன்சியைப் போலன்றி, இ-ரூபாயின் மதிப்பு எப்போதும் ஏற்ற இறக்கமாக இருக்காது என்பதே ஆகும்.
ரிசர்வ் வங்கியால் மத்திய வங்கி டிஜிட்டல் நாணயமாக (CBDC) பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படும் டிஜிட்டல் முறை பணமாகும். இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் UPI QR குறியீடுகள் மூலம் eRupee பணம் செலுத்த அனுமதிக்கும் என்று தெரிவித்துள்ளது. இப்போது இந்த முறை வளர்ச்சியில் உள்ளது. எப்படி நாம் இப்பொழுது நம் வங்கியில் உள்ள பணத்தை மாற்றி பொருட்களை வாங்குகிறோமோ? அதே போல இனி டிஜிட்டல் காகிதங்களிலும் பணம் செலுத்தி என்ற ஒரு பொருளையும் வாங்கிக் கொள்ளலாம்.
Input & Image courtesy: News