10 லட்சம் கொடுங்க! ஆண்டவன் ஒன்றரை கோடி கொடுப்பார்: அப்பாவி மக்களை ஏமாற்றும் கிறிஸ்தவ பாதிரியார்!
By : Kathir Webdesk
கிறிஸ்தவ பாதிரிகள் அப்பாவி மக்களை மூளைச்சலவை செய்து அவர்களின் பணத்தை பறிப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இறைவனுக்குக் கொடுப்பது செல்வம் அடைவதற்கு மிக முக்கியமான வழியாகும். உங்களிடம் உள்ளதைத் தருமாறு கேட்கின்றனர். அதை இறைவன் பல மடங்கு திருப்பித் தருவார் என உறுதி வார்த்தை அளிக்கின்றனர்.
பத்து லட்சம் கொடுத்தால் ஒன்று அரை கோடி பணம் கிடைக்கும், என்று ஆசை காட்டி சர்ச்களுக்கு நிதி உதவி கேட்கின்றனர். வசூலாகும் பணம் பாதிரியார்களின் சொந்த செலவீனங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.
வருமானத்தில் பத்தில் ஒரு பங்கான தசமபாகத்தை அவருடைய சபைக்கு செலுத்த வேண்டும் என்பது தேவனின் கட்டளைகளில் ஒன்றாகும். நாம் தசமபாகம் செலுத்தும்போது, நம்முடைய ஆசீர்வாதங்களுக்காக தேவனுக்கு நம் நன்றியைக் காட்டுகிறோம் என மக்கள் முன்னிலையில் உணர்ச்சி பொங்க பேசும் வீடியோ சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது.