Kathir News
Begin typing your search above and press return to search.

10 நாட்களில் கண்டம் விட்டு கண்டம் தாண்டிய பறவை: எடை வெறும் 400 கிராம் !

காட்விட் பறவை வட அமெரிக்காவில் உள்ள அலாஸ்காவில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு 10 நாட்களில் பறந்து சாதனை படைத்துள்ளது.

10 நாட்களில் கண்டம் விட்டு கண்டம் தாண்டிய பறவை: எடை வெறும் 400 கிராம் !
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  15 Nov 2021 1:56 PM GMT

இறைவனால் படைக்கப்பட்ட ஒவ்வொன்றுக்கும் ஓர் அற்புத சக்தி உள்ளது. ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு குணாதிசயங்களும் அதனுடைய சிறப்பம்சங்களும் உள்ளன. நம் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு பயிற்சி அளித்து அவற்றை கின்னஸ் சாதனை மாதிரியான உலக சாதனைகளை பலர் செய்து வருகின்றனர். இதுவே எந்தவொரு பயிற்சியும் தராத சாதாரண பறவை உலக சாதனை செய்தால் கண்டிப்பாக நாம் எல்லோரும் பார்ப்போம். அதுவும் ஒரு பறவை ஒரு கண்டத்தை விட்டு இன்னொரு கண்டத்திற்கு பறந்து சென்று புதிதான ஒரு சாதனையை செய்துள்ளது.


4BBRW என்ற பெயர் கொண்ட பறவை வட அமெரிக்காவில் உள்ள அலாஸ்காவில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு பறந்து சென்று சாதனையை படைத்துள்ளது. சுமார் 13 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவை வெறும் 239 மணி நேரத்திலே இப்பறவை பறந்து சென்றுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி அலாஸ்காவில் இருந்து புறப்பட்டு செப்டம்பர் 27 ஆம் தேதி ஆஸ்திரேலியாவை இப்பறவை அடைந்துள்ளது. இது எவ்வளவு வேகத்தில் பறந்திருந்தால் இவ்வளவு தொலைவை வெறும் 10 நாட்களிலே கடந்திருக்கும் என்பதை நினைத்து பாருங்கள். இதன் ஜெட் வேகத்தை வைத்தே இதற்கு ஜெட் ஃபைட்டர் பறவை என்கிற பெயரும் உண்டு. இதை காட்விட் என்று அழைக்கின்றனர்.


இதற்கு முன்னர் இந்த ஜெட் ஃபைட்டர் பறவை வேறொரு சாதனையையும் செய்துள்ளது. அலாஸ்காவில் இருந்து நியூசிலாந்து வரை குறுகிய நேரத்தில் பறந்து இது சாதனை செய்துள்ளது. இப்பறவை முன்னர் செய்த அதன் சாதனையையே இம்முறை அது முறியடித்துள்ளது. இந்த பறவையின் எடை 400 கிராம் ஆகும். இது பூச்சிகளை அதிகம் வேட்டையாடி உண்ணும். இதன்மூலம் தான் பயணத்தின்போது தனது பசியை தீர்த்து கொள்கிறது. இந்த ஜெட் ஃபைட்டர் பறவையின் உடல் வடிவம் அதிக வேகத்தில் பறக்கும்படி உள்ளது. இதன் உதவியுடன் தான் இது சிறப்பான வேகத்தில் பறக்கிறது. இந்த வகையான பறவைகள் அலாஸ்காவில் மட்டுமே காணப்படுகின்றன.

Input & Image courtesy:News 18


Next Story
கதிர் தொகுப்பு
Trending News