Kathir News
Begin typing your search above and press return to search.

ரூ.100 கோடி செலவில் 108 உயரத்திற்கு ஆஞ்சநேயர் சிலை.. தமிழகத்தில் வரப்போதா..

ரூ.100 கோடி செலவில் 108 உயரத்திற்கு ஆஞ்சநேயர் சிலை.. தமிழகத்தில் வரப்போதா..
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  5 Sept 2023 8:56 AM IST

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே அமைந்து இருக்கும் ஓலைக்குடா கிராமத்தில் சுமார் 100 கோடி செலவில் ஆன்மீக சுற்றுலா தலங்களான இலங்கையை பார்த்தபடி அமைய உள்ள 108 அடி ஆஞ்சநேயர் சிலை அமைய இருக்கிறது. இது தொடர்பான செய்திகள் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. ஏற்கனவே ராமேஸ்வரத்திற்கு பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருந்து வருகிறது. இந்நிலையில் அவற்றிற்கு மேலும் சிறப்பை தீர்க்கும் வகையில் தனியார் அறக்கட்டளை சார்பில் இந்த ஒரு சிலையும் விரைவில் அமைய இருக்கிறது. இதற்காக பெரிய தொகையும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.


அடுத்த ஆண்டிற்குள் அதாவது 2024 ஆம் ஆண்டிற்குள் இந்த சிலையை திறப்பு இருப்பதாகவும் தனியார் தரப்பில் இருந்து கூறப்பட்டிருக்கிறது. இதற்கு ஒப்பந்தக்காரர்கள் தற்போது முடிவாகி இருக்கிறார்கள். ராமாயணத்தில் முக்கிய பகுதியான ராமர் சீதையை மீட்பதற்காக ராமேஸ்வரத்தில் வந்து இங்கிருந்து தான் இலங்கைக்கு பாதை வகுத்து சென்றார். அதற்கு அனுமான் உதவினார் என்று புராணங்கள் கூறுகிறது. எனவே அனுமான் சிலை தற்போது ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை நோக்கி அமைய இருப்பது மற்றொரு சிறப்பு அம்சம்.


இதையடுத்து, இன்னும் ஆறு மாதங்களுக்குள் முழுமையாக பணிகள் முடிந்து அடுத்தாண்டு ராமேஸ்வரத்தில் இருக்கும் சுற்றுலா ஸ்தலங்களில் மற்றொரு முக்கிய புண்ணிய ஸ்தலமாகவும், சுற்றுலா ஸ்தலமாகவும் அமைய உள்ளது. தமிழகத்தில் மட்டும் கிடையாது இந்தியாவின் நான்கு மூலைகளிலும் இந்த மாதிரி அனுமான் சிலையை வைப்பதற்கு தனியார் நிறுவனம் முயற்சிகள் செய்து வருவதாகவும் கூறப்பட்டிருக்கிறது.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News