108 கிராம் தங்கத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட மாஸ்க்: விலை 5.7 லட்ச ரூபாய் !
108 கிராம் தங்கத்தை பயன்படுத்தி, உருவாக்கப்பட்ட தங்க மாஸ்க் விலை மட்டும் சுமார் 5.7 லட்சமாம்.
By : Bharathi Latha
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல விதமான முகக்கவசங்கள் சந்தையில் கிடைக்கின்றன. சாதாரணமான துணியால் தைக்கப்பட்டு விற்கப்படும் மாஸ்க் முதல், ஃபில்டர்கள் பொருத்திய லட்ச ரூபாய் மதிப்பிலான மாஸ்க் வரை பல விதமான முகக் கவசங்களை பார்த்துள்ளோம். ஆனால், அதை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு, மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு வணிகர் முழுக்க முழுக்க தங்கத்திலான ஒரு மாஸ்க்கை பிரத்யேகமாக ஆர்டர் செய்து வாங்கியிருக்கிறார். வங்காளத்தின் சவுத் 24 பர்கானாஸ் மாவாட்டத்தில் உள்ள பட்ஜ் டவுனில் வசித்து வருகிறார் சந்தன் தாஸ்.
இவர் ஒரு நகை வடிவமைப்பாளர். இவருக்கு தனது வாடிக்கையாளரின் விருப்பத்துக்கு ஏற்றவாறு பிரத்யேகமாக டிசைனர் நகைகளை வடிவமைத்துக் கொடுப்பது வழக்கம் என்று கூறப்படுகிறது. ஒரு உள்ளூர் வணிகர் சந்தன் தாஸை அணுகி ஒரு ஸ்பெஷல் கோரிக்கை விடுத்தார். வணிகருக்கு பிரத்யேகமான ஒரு தங்க மாஸ்க்கை வடிவமைத்து தர வேண்டும் என்று சந்தன் தாஸிடம் தெரிவித்தார். பிரத்யேகமாக நகை வடிவமைக்கும் தாஸ் இந்த கோரிக்கையை மறுக்க முடியாமல், 15 நாட்களுக்குள் முழுக்க முழுக்க தங்கத்திலான ஒரு முகக்கவசத்தை உருவாக்கிக் கொடுத்தார். அந்த தங்க மாஸ்க்கின் விலை 5.7 லட்ச ரூபாய் மற்றும் அதன் எடை 108 கிராம்கள்.
இந்த தங்க மாஸ்க்கை ஆர்டர் செய்த வணிகருக்கு அதை கொல்கத்தாவில் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படும் துர்கா பூஜையில் கலந்து கொள்ளும் போது அணிந்து கொள்ள வேண்டும் என்று ஆசை இருந்தது. அவர் ஆசை நிறைவேறினாலும், தங்க மாஸ்க்கை அணிந்துள்ளார் என்பதை சுற்றியிருப்பவர்கள் உணர்த்து இவரையே ஆர்வமாகப் பார்க்கத் தொடங்கினார்கள். எனவே, பாதுகாப்புக் காரணங்களுக்காக இவர் உடனேயே மாஸ்க்கை கழற்றிவிட்டார். பெங்காலி தினசரியான ஆனந்தபஸார் பத்ரிகாவுக்கு இதைப் பற்றி அளித்த பேட்டியில், தனக்கு நகைகள் மிகவும் பிடிக்கும் என்றும், அதை அனைவரும் பார்க்கும் படி வெளிப்படையாக அணிவது மிகவும் விருப்பம் என்றும் தெரிவித்தார். வணிகரின் 5.7 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க மாஸ்க் புகைப்படங்களை பத்திரிக்கையாளர் ஒருவர் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். தங்க மாஸ்க் புகைப்படங்கள் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
Input & Image courtesy:India