செஸ் ஒலிம்பியாட் - மலைக்க வைக்கும் ஒரு செஸ் போர்டின் விலை?
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பயன்படுத்தப்படும் செஸ் போட்டியின் ஆரம்ப விலை 30 ஆயிரம்.
By : Bharathi Latha
சென்னையில் தற்போது தொடர்பு கொண்டு செல்லும் பிளாட் போட்டு உலக நாடுகளுக்கு மத்தியில் பல்வேறு எதிர்பார்ப்புகள் நிறைந்த காலமாக தற்போது மாறியுள்ளது. மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பயன்படுத்தப்படும் போது விலை தற்போது ரசிகர்களுக்கு இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பயன்படுத்தப்படும் செஸ் போர்ட்-ன் விலை ₹30, 000. சென்னையில் தொடங்கிய 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி கள் மாமல்லபுரத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் இரு தினங்களுக்கு முன்பு தொடங்கிய ஆட்டங்கள் ஆகஸ்ட் 9-ம் தேதி வரை நடைபெறும் என்று ஏற்கனவே விளையாட்டுத் துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் செஸ் ஒலிம்பியாட் இடமாக கருதப்படும் தம்பி லோகோ சென்னை முழுவதிலும் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்த போட்டி ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு சுற்று என்ற கணக்கில் மொத்தமாக 11 சுற்றுகளாக நடைபெறவுள்ளன. மேலும் இந்த போட்டிகளுக்காக 189 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் இதில் கலந்துகொள்ள உள்ளார்கள்.
சுமார் 2000 தங்கும் அறைகள், உணவு, போக்குவரத்து என வியப்பூட்டும் அளவிற்கு ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டுள்ளன. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பயன்படுத்தப்படும் ஒரு செஸ் பலகையின் விலை ரூ.30,000 ஆயிரம் எனத்தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் 740 பலகை என ரூ. 2 கோடியே 22 லட்சம் செலவளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் இதில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் நெதர்லாந்தில் தயாரிக்கப்பட்ட இந்த சஸ் பலகையில் ஹைடெக் டிஜிட்டல் வசதி கொண்டவை ஆகும்.
Input & Image courtesy: Mykhel News